தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/தீபாவளிக்கு 'தங்க' ஸ்வீட்

தீபாவளிக்கு 'தங்க' ஸ்வீட்

தீபாவளிக்கு 'தங்க' ஸ்வீட்


PUBLISHED ON : நவ 04, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகளின் வெடிச்சத்தமும், வண்ண வண்ணக் கோலங்களும், வாயில் ஊறும் நாவில் கரையும் தித்திப்பான ஸ்வீட்டுகளும்தான்.Image 1640751காலம்காலமாக மைசூர் பாக், லட்டு, ஜிலேபி மற்றும் அதிரசம் எனத் தொடங்கி, இன்று காஜூ கட்லி, சாக்லேட் மோதக், பாதாம் அஞ்சீர் ரோல் எனப் பல நூறு நவீன ஸ்வீட்டுகள் வரை கடைகளை அலங்கரித்து மக்களை ஈர்க்கின்றன. மக்கள் கூட்டமும் தங்களுக்குப் பிடித்தமானவற்றை வாங்கக் கடைகளில் அலைமோதுகிறது.Image 1640752ஆனால், இந்த வழக்கமான ஸ்வீட்டுகளையெல்லாம் சாப்பிட்டுச் சலித்துப் போனவர்களுக்காக, இந்தியாவின் நுகர்வோர் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு புதுமை புகுத்தப்படுவது வாடிக்கை. அந்த வகையில், இந்தத் தீபாவளிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அறிமுகமாகி இருக்கும் ஒரு விஷயம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுதான் 'ஸ்வர்ண மிட்டாய்' எனப்படும் தங்க மிட்டாய்!Image 1640753ராஜஸ்தானின் பாரம்பரியமிக்க தலைநகரான ஜெய்ப்பூர், அதன் அரசவை உணவுகள் மற்றும் பிரம்மாண்டமான விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது. நவீன காலத்திற்கேற்ப பாரம்பரிய இனிப்புகளைப் புதுமையான முறையில் மாற்றுவதில் கைதேர்ந்த ஜெய்ப்பூர் மிட்டாய் வியாபாரிகள், இந்த முறை 24 காரட் உண்ணக்கூடிய தங்கத் தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அதிநவீன 'ஸ்வர்ண மிட்டாய்' வகைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.Image 1640754ஒரே ஒரு துண்டு ரூ. 1,111 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது! ஒன்பது துண்டு கொண்ட ஸ்வீட் பாக்கெட் ஜஸ்ட் 9,999 ரூபாய்தானாம்.இதே விலையில் தங்கத் தாள்கள் தூவப்பட்ட மேலும் சில ஆடம்பர இனிப்புகளையும் அவர்கள் தயாரித்துக் குவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளின் போது, சாதாரண இனிப்புகளுக்கு மாற்றாகத் தங்கம் அல்லது வெள்ளித் தாள்கள் பொதிக்கப்பட்ட பிரீமியம் மற்றும் அதிநவீன இனிப்புகளை வாங்குவது ஒரு பெரும் டிரெண்டாக மாறி வருகிறது. பெரும் செல்வந்தர்கள், விஐபிக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாக இதுபோன்ற ஆடம்பரப் பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதில் பயன்படுத்தப்படும் தங்கத் தாள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத 'உண்ணக்கூடிய தங்கம்' வகையைச் சேர்ந்தது என்பதும், இது சுத்தமான 24 காரட் தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மருத்துவ ரீதியாக ஆபத்தும் இல்லை சாப்பிடுவதால் ஒரு சத்தும் இல்லை என்கிறது அறவியல் உலகம்.

இந்தத் தங்க மிட்டாயை ஆயிரக்கணக்கில் விலைகொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் சொல்லும் ஒரு நகைச்சுவையான அறிவுரைதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது:

'தயவுசெய்து இதை வாங்கியவர்கள் உடனே சாப்பிட்டு விடுங்கள் ! பழக்க தோஷத்தில், வழக்கம் போல இதைக் கொண்டு போய் லாக்கரில் பத்திரமாகப் பூட்டி வைத்துவிடாதீர்கள். அப்புறம் எறும்புகள் உங்கள் சொத்தையெல்லாம் தின்னு தீர்த்துவிடும் என்பதுதான் அந்த அறிவுரை.

-எல்.முருகராஜ்

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us