PUBLISHED ON : நவ 05, 2026 09:50 PM

ஜப்பானைச் சேர்ந்த தோஷிசுகே கனாசவா, உலக அளவில் மிகவும் வயதான மற்றும் பிரபலமான பாடிபில்டர்களில் ஒருவர் . இளைய தலைமுறை பாடிபில்டர்களுக்கே சவால் விடும் வகையில் தனது உடற்கட்டை இவ்வளவு வயதிலும் மிகச் சிறப்பாகப் பராமரித்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கனாசவா தனது இளமைக் காலத்தில் பல போட்டிகளில் வென்றிருந்தாலும், சில தனிப்பட்ட காரணங்களால் பாடிபில்டிங்கிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். பின்னர் தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு, தனது உடல்நலனைப் பேண மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார்.


மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்குத் தோஷிசுகே கனாசவா ஒரு சிறந்த உதாரணம்!
----எல்.முருகராஜ்.
