sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

பச்சைக்கிளிகள் தோளோடு

/

பச்சைக்கிளிகள் தோளோடு

பச்சைக்கிளிகள் தோளோடு

பச்சைக்கிளிகள் தோளோடு


PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜஸ்தானுக்கே உண்டான வறண்ட மணலும், வெப்பமான காற்றும் நிறைந்த ஊர்களில் ஒன்றுதான் பிகானீர்.

அங்கு சில சமயம் வெப்பம் 45 டிகிரியைக்கூடத் தாண்டி தகிக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் மட்டுமே அமுதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்.

அந்த தண்ணீர் கிடைக்காமல் பறவையினங்கள் பாடய்பாடும் .

அந்த ஊரில் மற்ற பறவைகளை விட கிளிகள் அதிகம். சில கிளிகள் உஷ்ணம் தாங்காமல் மயங்கிவிழும்,சில கிளிகள் மயங்கிப் போன நிலையில் எங்கே அமர்கிறோம் என்பது தெரியாமல் மின் கம்பிகளில் அடிபட்டு விழும்.Image 1493927இப்படி காயம்பட்டு மயக்கமடைந்து விழுந்த கிளிகளை பார்த்தால்,' இதற்கு நாம் என்ன செய்யமுடியும்'? என்று மற்ற ஊர்களாக இருந்தால் வேடிக்கை பார்த்துவிட்டு தத்தம் வேலையை பார்க்கப் மக்கள் போய்விடுவர் ஆனால் பிகானீர் மக்கள் அப்படியில்லை உடனே அந்த கிளியை துாக்கிக் கொண்டு ஒரு இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

அந்த இடம்தான் பிகானீர் விலங்கு மீட்பு மையம்

பெயர்தான் விலங்கு மீட்பு மையம் ஆனால் தொன்னுாறு சதவீதம் கிளிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் மையமாகவே செயல்படுகிறது.

தன் வீட்டு மாடிகளில் பறவைகளுக்கு குடிநீர் வைக்க ஆரம்பித்த சூரிய பிரகாஷ்சின் அடுத்த கட்ட நகர்வே இந்த மீட்பு மையம்,நிலமும் வளமும் இருந்ததால் யாரையும் எதிர்பாரமல் இந்த மீட்பு மையத்தை துவக்கி இதற்கென சில பணியாளர்களையும் நியமித்து கடந்த சில வருடங்களாக மையத்தை செம்மையாக நடத்திவருகிறார்.

இந்த மையத்திற்கு எடுத்து வரப்படும் கிளிகளுக்கு முதலில் மருத்துவம் தரப்படுகிறது பின் நல்ல உணவு கொடுத்து பாதுகாப்பான ஒய்விடம் கொடுத்து அது தன் பழைய நிலைக்கு திரும்புவரை கண்ணும் கருத்துமாக பராமரிக்கப்படுகிறது.Image 1493928எல்லாம் சரியானதும் கிளி மீண்டும் அங்கிருந்து பறக்கிறது அது சிறகடித்து பறப்பதை பார்ப்பதற்காக அங்கு திரண்டிருக்கும் மையத்தின் பணியாளர்கள் கைதட்டி மகிழ்கின்றனர் அவர்களுக்கு அதுதான் சம்பளத்தை விட அதிக சந்தோஷம் தருகிறது.அந்த நேரம் சுதந்திரமாக வானில் சிறகடித்து பறப்பது கிளிகள் மட்டுமல்ல இங்குள்ள பணியாளர்களின் மனமும்தான்.

பாதிக்கப்பட்ட கிளிகள் பல இங்கு இருக்கின்றன அவை தங்களை அன்போடு கவனித்து சாப்பாடு கொண்டு வருபவரைப் பார்த்ததும் தோளில் தலையில் கைகளில் உட்கார்ந்து கொஞ்சும் அழகே தனி

மனிதனின் வளர்ச்சி என்பது அவன் காட்டும் கருணையில்தான் உள்ளது.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us