sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

63 நாயன்மார்களில் அமர்ந்த கோலம் கொண்ட நாயன்மார் இவர் மட்டுமே..

/

63 நாயன்மார்களில் அமர்ந்த கோலம் கொண்ட நாயன்மார் இவர் மட்டுமே..

63 நாயன்மார்களில் அமர்ந்த கோலம் கொண்ட நாயன்மார் இவர் மட்டுமே..

63 நாயன்மார்களில் அமர்ந்த கோலம் கொண்ட நாயன்மார் இவர் மட்டுமே..

1


PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1385886சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு செல்பவர்கள் பிராகாரம் சுற்றிவரும் போது 63 நாயன்மார்களைக் காணலாம்.

அவர்களில் 62 நாயன்மார்கள் நின்ற கோலத்தில் காட்சி தர ஒரே ஒருவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார்.Image 1385890அவரே காரைக்கால் அம்மையார்.

அவருக்கு ஏன் இந்த சிறப்பு

முற்காலத்தில் காரைக்காலில் வணிக குடும்பத்தில் பிறந்தவர் புணிதவதி, பெரும் சிவபக்தர்.

பரமதத்தன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்,பரமதத்தன் ஒரு முறை வணிகம் செய்யும் கடையில் இருந்து இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு மதிய உணவிற்காக கொடுத்து அனுப்பினார்,அந்த மாம்பழம் வந்த நேரம் ஒரு சிவனடியார் புணிதவதியின் வீட்டு வாசலில் பசியோடு வந்து நின்றார், அவர் பசி போக்கிட புனிதவதி அன்னத்துடன் ஒரு மாம்பழத்தையும் கொடுத்தார்.

மதிய உணவிற்கு வந்த பரமதத்தன் தான் கொடுத்தனுப்பிய மாம்பழத்துடன் சாப்பாடு கேட்க, புனிதவதி ஒரு மாம்பழம் கொடுத்தார், இன்னோரு மாம்பழமும் வேண்டும் என்று கணவர் கேட்க,சமையலறை சென்ற புணிதவதி இறைவனை வேண்டி நின்றார், அவர் கையில் மாம்பழம் கிடைக்க இறைவன் அருளினார்.அந்த மாம்பழத்தை கணவரிடம் கொடுத்தார்,கணவர் சாப்பிட்டுவிட்டு இந்த பழம்'நான் கொடுத்துவிட்டது போல இல்லையே' என்றிருக்கிறர்,புணிதவதி நடந்ததைச் சொல்ல கணவர் நம்ப மறுத்தார், எங்கே என் முன் இன்னோரு மாம்பழத்தை வரவழைத்துக் காட்டு எனச் சொல்ல,புணிதவதியும் இறைவனை வேண்டி இன்னோரு மாம்பழத்தை வரவழைத்துத் தந்தார்,மிரண்டு போன பரமதத்தன் நீ சாதாரண பெண் இல்லை தெய்வப்பெண் என்று கூறி அவரை விழுந்து வணங்கினான்,அந்தக் கணமே விட்டுவிலகினான்.

பின்னர் புணிதவதி இறைவனைப் போற்றி பல பாடல்கள் பாடினார், ஒரு கட்டத்தில் தனது இளமையையும் அழகையும் அழித்துவிட்டு யாரும் பார்க்க விரும்பாத பூதகண தோற்றத்தை வரமாக தரும்படி கேட்டுப்பெற்றார்,இறைவனைப் பாடுவதையே வாழ்க்கையாகக் கொண்டார்,இறைவன் உறையும் கயிலை நோக்கிச் சென்றார், கயிலையை அடைந்ததும் சிவன் உறையும் இடத்தை காலால் மிதிப்பது கூடாது என்று முடிவு செய்து கைகளின் உதவியுடன் தலையால் நடந்து சென்றார்.

இவரது பக்தியின் உச்சத்தைப் பார்த்து, தாய் தந்தை அற்ற இறைவன் என்று போற்றப்படும் சிவன், புணிதவதியைப் பார்த்து 'அம்மையே வருக' என்றழைத்து அருகில் இருத்திக் கொண்டார், அவர் அம்மையே என்று அழைத்ததால் அம்மயைார் என்றும் காரைக்காலில் பிறந்ததால் காரைக்கால் அம்மையார் என்றும் அழைக்கப்பட்டார்.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்,திருவிரட்டை மணிமாலை,அற்புதத் திருவந்தாதி என்று சிவனைப் போற்றி பல்வேறு பாடல்கள் பாடியவர், இசைத்தமிழின் அன்னை என்று போற்றப்படுபவர் இப்படி சிவனுக்கே அன்னையானவர் என்பதால் அமர்ந்த கோலத்தில் காட்சிதரும் நாயன்மாராக இருக்கிறார்.Image 1385888மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற விழாவில் 'தொண்டர் தம் பெருமை' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் நிகழ்த்திய சொற்பொழிவில் கேட்டது..

-எல்.முருகராஜ்.






      Dinamalar
      Follow us