PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM
![]() |
பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிராபாகரனுக்கு அமைச்சர் மூர்த்தி,முதல் அமைச்சர் சார்பாக பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கினார்.
![]() |
காரை பரிசாகப் பெற வந்த பிரபாகரன் ஐயா,நான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன் நான் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன் இந்தக் காரை வைத்து என்ன செய்யப்போகிறேன் இதற்கு பதிலாக அரசு வேலை தந்தால் வாழ்நாள் முழுவதும் நானும் எனது குடும்பமும் சந்தோஷப்படும் என்றார் ஏற்பாடு செய்வோம் முதலில் கார் பரிசை வாங்கிக் கொள் என்று கொடுத்தனர்.
![]() |
தொடர்ந்து பேட்டியளித்த பிராபாகரன்,கிரிக்கெட் மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்று வாகை சூடுபவர்களுக்கு அரசு வேலை தேடி தேடித் தரப்படுகிறது ஆனால் அதைவிட உயிரை பணயம் வைத்து விளையாடும் இது போன்ற போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு தரப்படுவதில்லை இந்த நிலை மாறவேண்டும் என்று நீண்ட காலமாக சொல்லி வருகிறோம் என்றார்.
இதே போல சிறந்த காளைக்கான பரிசை புதுக்கோட்டை ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவருக்கு வழங்கப்பட்டது.அவர் கூறுகையில் நான் மாடு பிடிக்கும் வீரராகத்தான் ஆசைப்பட்டேன் ஆனால் என் உடல்நிலை காரணமாக நான் ஆசைப்பட்டது நடக்கவில்லை இதன் காரணமாக ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க ஆரம்பித்தேன நிறைய செலவு செய்தேன் வீட்டில் அனைவரும் எதிர்த்தனர் அத்தனை எதிர்ப்புக்கும் பதில் சொல்லும் வகையில் என் சின்ன கருப்பு காளை எனக்கு காரை பரிசாகப் பெற்றுக் கொடுத்துள்ளது என்று பெருமிதமாகக் கூறினார்.




