PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்ஆனந்தம் அரவணைத்துக் கொள்ள காத்திருக்கிறது
நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் உயர்கல்வியை தொடர முடியாத மாணவ,மாணவியருக்கு அவர்களில் கல்விச்செலவை முற்றிலும் இலவசமாக ஏற்றுக்கொள்ள ஆனந்தம் கல்வி அறக்கட்டளை அமைப்பு காத்திருக்கிறது,தகுதி உடைய மாணவ,மாணவியர் உங்கள் வீட்டில் இல்லாவிட்டாலும் எந்த வீட்டில் அப்படிப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த செய்தியை கொண்டு போய் சேர்ப்பியுங்கள் செலவு எதுவும் கிடையாது புண்ணியம் மட்டுமே.
ஆனந்தம் கல்வி அறக்கட்டளை (Anandham Youth Foundation) என்பது தமிழகத்தின் வசிக்கும் பொருளாதாரத் தாழ்வான மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பாகும்.ஒவ்வொரு இளைஞரும் சிறந்த கல்வி மற்றும் மதிப்பீட்டு அடிப்படையிலான பயிற்சிகள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுகடந்த 2012ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
பொருளாதாரக் குறைபாடுகள் காரணமாக கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முழுமையான நிதி உதவியை வழங்கி, அவர்களை தன்னம்பிக்கையுடன் வாழும் நபர்களாக உருவாக்கிவருகிறது இதுவரை இந்த அறக்கட்டளையின் மூலம் 984 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் இவர்களில் பல மருத்துவர்கள்,பொறியாளர்கள்,உள்ளனர் பலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உயர்நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இந்த ஆனந்தம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் செல்வகுமார், மாணவர்களின் நலனுக்காக செய்துவரும் இந்த சேவையை பராட்டி தமிழ்நாடு அரசு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான உயர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த வருடம் பிளஸ் டூ படித்து முடித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து முடித்த மாணவ,மாணவியர் விண்ணப்பிக்கலாம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான கல்விக்கட்டணம் மட்டுமின்றி தேவை என்றால் விடுதிக்கட்டணத்தையும் அறக்கட்டளையே செலுத்தும்.
-எல்.முருகராஜ்