PUBLISHED ON : ஏப் 13, 2026 06:29 PM

இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசு 1919-ஆம் ஆண்டு கொண்டு வந்த மிகக்கொடூரமான சட்டமே 'ரௌலட் சட்டம்'. இந்தியர்களால் 'கருப்புச் சட்டம்' என்று வர்ணிக்கப்பட்ட இச்சட்டம், பிரிட்டிஷ் காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியது. சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்பதே இதன் சாராம்சம். தண்டிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யவோ, வழக்கறிஞர்களை அமர்த்தவோ கூட உரிமை மறுக்கப்பட்டது.


இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து இன்றுடன் 107 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், அந்த மண்ணில் படிந்திருக்கும் தியாகத்தின் சுவடுகள் இன்னும் ஈரப்பதம் மாறாமலேயே இருக்கின்றன. இன்று அதன் 107-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் உள்ள 'அமர் ஜோதி' முன்பு பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மக்கள் இன்றும் அந்தச் சுவர்களில் உள்ள துப்பாக்கிக் குண்டு துளைகளைத் தொட்டுப் பார்த்து, அன்றைய கொடுமையை எண்ணிக் கண்ணீர் மல்க நின்றனர். பல நூறு பேர் உயிரைத் தியாகம் செய்த 'தியாகிக் கிணறு' பகுதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தப் போராட்ட வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சிகளும், நாடகங்களும் நடத்தப்பட்டன.
'மறக்க முடியாத வரலாறு, மன்னிக்க முடியாத துரோகம்' என மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாவும் தியாகிகளுக்குத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.
-எல்.முருகராஜ்
