sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க

/

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க


PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாகஅன்போடு ஓடிவாங்க

யாருக்கும் தொந்திரவு இல்லாத ஒரு இடத்தில் நின்று கொண்டு அந்த மனிதர் ஒரு தட்டில் மெல்லியதாக கரண்டியால் அடித்து சத்தம் எழுப்புகிறார்.

அந்த சத்தத்திற்காகவே காத்திருந்தது போல எங்கேங்கோ இருந்து பல காக்கைகள் அங்கே கூடுகின்றன.

ஒரு தட்டில் சாப்பாடு போட்டு, கூட்டு பொரியல் வைத்து, காரமில்லாமல் சாம்பார் ஊற்றிவிட்டு ஒரமாக நின்று கொள்கிறார்.Image 1434781அதை,அவரை ஒரக்கண்ணால் பார்க்கும் காக்கைகள் பின் ஒன்றாக பறந்து சென்று தட்டைச்சுற்றி உட்கார்ந்து உணவை உட்கொள்கின்றன.சிறிது நேரத்தில் தட்டும் காலியாகிவிடுகிறது காக்கைகள் கூட்டமும் காலியாகிவிடுகிறது சாப்பாடு வைத்த அந்த மனிதர் மனம் மட்டும் நிறைந்து இருக்கிறது.Image 1434782அவர் பெயர் ஜெய நாராயணா,மங்களூரு பொத்தனஹல்லி என்ற இடத்தில் ஒரு ஒட்டலில் சாதாரண ஊழியராக பணியாற்றுகிறார்.

ஒரு நாள் மதிய வேளையில் தனது ஒட்டலைச் சுற்றியுள்ள இடத்தின் அருகே காக்கைகள் கூடிநின்று சத்தமிட்டதை பார்த்திருக்கிறார்,எதற்காக கத்துகிறது பசியாக இருக்குமோ? என்ற ஊகத்தில் ஒட்டலுக்குள் சென்று மீந்து போன உணவை தட்டில் வைத்து காக்கைகள் இருக்குமிடத்தில் வைத்தார்.

அதற்காகவே காத்திருந்தது போல காக்கைகள் அனைத்தும் பறந்து வந்து அந்த உணவை சாப்பிட்டுவிட்டு கண்களின் நாராயணாவிற்கு நன்றியை காண்பித்துவிட்டு பறந்து சென்றன.

மறுநாள் அதே நேரம் அதே இடத்தில் சத்தமும் அதிகமாக இருந்தது காக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

அன்று கூடுதலாக கொஞ்சம் உணவு கொண்டு வந்து வைத்தார்,வைத்த அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு பறந்தன.

இது நடந்து நான்காண்டுகளுக்கு மேலிருக்கும் அன்று முதல் இன்று வரை காகங்களுக்கு மதிய உணவு தரும் இவரது செயல் தங்கு தடையின்றி தொடர்கிறது.காக்கைகள் வந்து உணவிற்காக காத்திருக்கவேண்டாமே என்பதற்காக, தான் வந்துவிட்டதை தெரிவிக்கும் வகையில் பாத்திரத்தில் கரண்டியால் தட்டி சத்தம் எழுப்புகிறார், அந்த சத்தத்தை தொடர்ந்து காக்கைகள் வரத்துவங்குகின்றன.

இது எனக்கான என் முன்னோர்கள் ஆசீ்ர்வாதம் என் ஆயுளுக்கும் இதைத் தொடர்வேன் என்கிறார் நாராயணா.

நாராயணா..நாராயணா..

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us