தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்

மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்

மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்


PUBLISHED ON : டிச 15, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2018 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவும் கொடுப்பர், இன்னமும் கொடு்ப்பர்



மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்



தேவைக்கு மேல் இருப்பதை கொடுப்து தர்மம் அல்ல தேவைகளை குறைத்துக் கொண்டு கொடுப்பதே எங்கள் தர்மம் என்று இன்றும் டவுன் பஸ்சில் பயணிக்கும் மூத்த தம்பதியினர் தங்களது கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை தர்ம காரியத்திற்கு கொடுத்துள்ளனர் இன்னமும் கொடுத்து வருகின்றனர்



மதுரை திருநகரைச் சேர்ந்த அந்த தம்பதிகளின் பெயர் ஜனார்த்தனன்-ஜலஜாவாகும்.மத்திய அரசு ஊழியர்களாக இருந்த இவர்கள் தொண்டு செய்வதற்காகவே விருப்ப ஒய்வு பெற்றனர்.



ஒய்வு பெற்ற போது கிடைத்த பணத்தைக் கொண்டு திருநகரில் ஐந்து கிரவுண்டு இடத்தை வாங்கிப்போட்டனர்.அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும்.அதில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர்.ஜனார்தனனுக்கு திடீரென பார்வைக் கோளாறு ஏற்படவே தாம் முதியோர் இ்ல்லம் நடத்தமுடியாது நடத்துபவர்கள் யாருக்காவது இடத்தை கொடுத்துவிடலாம் என முடிவு செய்தனர்.



அந்த நேரத்தில் டாக்டர் பாலகுருசாமி உள்ளீட்ட சில இளம் டாக்டர்கள் ஒன்று சேர்ந்து ‛ஐஸ்வர்யம் அறக்கட்டளை' என்ற அமைப்பினை துவங்கி ஆதரவில்லாமல் தெருவில் வீசப்பட்ட வயதானவர்களை காப்பாற்றி தகுந்த மருத்துவமும் உணவும் கொடுத்து காப்பாற்றி வந்தனர்.ஆனால் போதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டனர் இதனைக்கேள்விப்பட்ட ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர் தங்களது இடத்தை தானமாக கொடுத்தனர்.



ஆனாலும் மருத்துவர்கள் குழு தானமாக இடத்தைப் பெற சிறு தயக்கம்காட்டினர் , இடத்தை பதிவு செய்ய இரண்டரை லட்ச ரூபாய் தேவை என்பதுதான் அந்த தயக்கத்திற்கு காரணம்.இதைக் கேள்விப்பட்ட தம்பதியினர் இடத்தை தானமாக கொடுத்ததுடன் நி்ற்காமல் தங்களது சேமி்ப்பில் இருந்த பணத்தை எடுத்து இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து இடத்தை பதிவும் செய்து கொடுத்தனர்.



இடம் கிடைத்துவிட்டது இனி இதில் கட்டிடம் கட்டவேண்டுமே என்ற நிலை வந்த போது மீண்டும் இதே தம்பதியினர் தங்களது வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் நட்புகளிடம் விஷயத்தைச் சொன்னதும் நிதி வந்து சேர்ந்தது, இரண்டு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது.



கட்டிடம் கட்டியாகிவிட்டது நோயாளிகள் படுக்க படுக்கை வேண்டுமே என்ற சூழ்நிலையில் கொஞ்சமும் தயங்காமல் ஐம்பது கட்டில்கள் வாங்கி கொடுத்தனர்.இதை எல்லாம் நிர்வாகம் செய்ய இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும் என்ற போது இந்தாருங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அதையும் வாங்கிக் கொடுத்தனர்.



இப்படி இதுவும் கொடுப்பான் இன்னமும் கொடுப்பான் என்ற கர்ணனைப் போல தர்ம காரியத்திற்கு கொடுத்துக் கொண்டே இருக்கும் இந்த தம்பதியினர் பெரிய பணக்காரர்கள் அல்ல மத்திய அரசு வழங்கும் பென்ஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள்தான் எங்காவது போகவேண்டும் என்றால் கால் டாக்சியில் போனால் கூட காசு செலவாகும் என்று நினைத்து டவுன் பஸ்சில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர்.



வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது தங்களது வேலைகளை தாங்களேதான் செய்து கொள்கின்றனர் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளை அழைத்து மாலை நேரங்களில் தங்களது அறிவை பகிர்ந்து கொண்டு இலவச ட்யூஷன் எடு்க்கின்றனர் பிறகு நேரம் கிடைக்கும் போது ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு விசிட் செய்து அங்குள்ளவர்களிடம் அன்பாக பேசி ஆறுதலளித்துவிட்டு வருகின்றனர்.தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரிடம் பேசினாலும் தர்மம் செய்யச் சொல்லி வலியுறுத்தி அந்த தர்மத்தை ஐஸ்வர்யம் அறக்கட்டளை உள்ளீட்ட தொண்டு நிறுவனங்கள் பெறச் செய்கின்றனர்.



இவர்களின் தயவால் இப்போது வாழ்வின் விளிம்பு நிலையில் மரணத்தின் வாசலில் இருப்பவர்கள் என்று யாருமே கவனிக்காமல் குப்பையாக வீசியெறியப்பட்ட ஆண்,பெண் முதியவர்கள் 39 பேர் ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் தங்கி கடைசி காலத்தை நிம்மதியாக கழித்துவருகின்றனர்.



அவர்கள் மட்டுமல்ல நீங்களும் நிம்மதியாக வாழ்க்கைகை கடக்கவேண்டும் என்றால் தர்மம் செய்வதை சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் வீட்டில் உள்ள சிறு வயது குழந்தைகளையும் தர்மம் செய்யவைத்து பழக்குங்கள்,தேவைக்கு மேல் அல்ல தேவைகளை கூட குறைத்துக்கொண்டு கொடுத்து பாருங்கள் அதன் சுகமே தனி என்று சொல்லும் இந்த தம்பதியை வாழ்த்த விரும்புபவர்களுக்கான எண்:0452-248410099 (எழுபத்தைந்து வயதை தாண்டிய தம்பதியர் ஆகவே போனை எடுக்க தாமதமாகலாம் எடுக்காலும் போகலாம் கவனத்தில் கொள்ளவும்)



-எல்.முருகராஜ்





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us