தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/ஜெயராமா...ஜெயராமா

ஜெயராமா...ஜெயராமா

ஜெயராமா...ஜெயராமா


PUBLISHED ON : டிச 18, 2014 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2014 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த வாரத்தில் ஒரு நாள்

சென்னையில் ரைட் மந்திரா நடத்திய விழாவின் மத்தியில் ஒரு அறிவிப்பு.

இந்த வருடம் கோவிலை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியில் சிறப்பாக செயல்பட்ட ஜெயராமன் என்பவருக்கு அப்பர் திருநாவுக்கரசர் விருது வழங்கப்படுகிறது என்று.

அந்த அறிவிப்பை தொடர்ந்து சபையின் நடுவில் பார்வையாளர் பார்க்கும்படியாக ஒரு நாற்காலி கொண்டுவந்து போடப்பட்டது.

தொடர்ந்து ஒருவர் கைக்குழந்தையை துாக்கிக்கொண்டு வருவது போல மார்போடு இறுக அணைத்தபடி ஒருவரை துாக்கிக்கொண்டுவந்து நாற்காலியில் உட்காரவைத்தார்.

அதற்குபிறகுதான் தெரிந்தது விருது பெற இருக்கும் ஜெயராமன் இடுப்புக்கு கிழே இரண்டு கால்களும் இல்லாமல் இருப்பதை.அரங்கம் முழுவதுமே அப்படியொரு அமைதி. எப்படி இவரால் இந்த நிலமையில் உழவாரப்பணியில் ஈடுபட முடிந்தது என்று அனைவருக்குமே ஆச்சர்யம்.

இப்போது ஐம்பத்தைந்து வயதைத்தொட்டுள்ள ஜெயராமன் சென்னையில் உள்ள கனரா பாங்கில் கார் டிரைவராக வேலை பார்த்துவந்தார்.

வெளியூர் போய்விட்டு திரும்பும் போது எதிர்பாரமல் ஏற்பட்ட மின்சார ரயில் விபத்தில் சிக்கி தனது இரண்டு கால்களையும் இழந்தார்.

இரண்டு வருட மருத்துவ போராட்டத்திற்கு பிறகு உயிர்பிழைத்தார். கார் ஒட்டுவதற்கு தேவையான கால்கள் இல்லாமல் வாழ என்ன வழி என்ற நிலையில் பாங்க் நிர்வாகம் கருணையோடு ஜெயராமனுக்கு அவரால் என்ன வேலை செய்யமுடியும் என்று பார்த்து அதற்கு ஏற்ற வேலை கொடுத்துள்ளது.

கேகேநகரில் உள்ள வீட்டைவிட்டு மூன்று சக்கர சைக்கிளில் கிளம்பி பாங்க் வேலை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலையார் அறப்பணிக்குழு ராமச்சந்திரன் என்பவருடன் தொடர்பு கிடைத்தது.

இந்த அறப்பணி குழுவானது எந்தவித எதிர்பார்ப்புமின்றி உழவாரப்பணிகளை செய்துவருகிறது.இதுவரை 86 நாட்களில் 60 கோவில்களில் உழவாரப்பணியினை மேற்கொண்டுள்ளது.

கடலுாரில் உள்ள ஒரு கோவிலுக்கு உழவாரப்பணியினை மேற்கொள்ள செல்லும் போது ஜெயராமன் தானும் கோவிலை சுத்தம் செய்யும் பணிக்கு வருவதாக சொல்லியுள்ளார்.

உனக்கு நடந்து போக கால் இல்லையேப்பா எப்படிப்பா? என்று கேட்டபோது சுத்தம் செய்ய இரண்டு கைகள் இருக்குங்களேய்யா என்று சொன்னதும் நிச்சயம் நீ எங்ககூட வர்ரே என்று சொல்லி காரில் கடலுார் கோயிலில் கொண்டு போய் இறக்கிவிட்டதும், அங்கு இருந்தவர்கள் ஜெயராமனைப்பார்த்துவிட்டு இவருக்கு முன் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்லி வியந்திருக்கின்றனர்.

அப்போது துவங்கிய ஜெயராமனின் உழவாரப்பணி மாதத்தில் ஒரு நாள் என்று இப்போது வரை தொடர்கிறது.

துாண்களை சுத்தம் செய்வது, பெயிண்ட் அடிப்பது, தண்ணீர் போக்கு கால்வாரய் அடைப்பை நீக்குவது என்று ஜெயராமன் தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டு இருப்பார்.மழை காரணமாக கோவிலுக்குள் சேறு நிறைந்து இருக்கும் சமயங்களில் இவரால் உட்காரமுடியாத போது உழவாரப்பணிக்கு தேவையான பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்.

இதுதான் ஜெயராமன் கதை இந்த கதையை உருக்கமாக சொல்லிமுடித்து விருதினை வழங்க சிறப்பு விருந்தினர் ஆடுதுறை அழகு பன்னீர் செல்வத்தை அழைத்தனர். அவரோ இவரது பாதம் இருந்த பக்கம் நோக்கி ஆயிரம் முறை வணங்கி இந்த விருதினை வழங்குகிறேன் என்று தளுதளுத்த குரலில் சொன்ன போது அவையில் இருந்தோர் அனைவரது கண்களிலும் கண்ணீர்.

தற்போது ஜெயராமன் உடல்நிலை சரியில்லாமல் பேசமுடியாமல் இருக்கிறார் அவரது எண்ணை(9444773186)எண்ணை தொடர்பு கொண்டால் அவரை பார்த்து கொள்ளும் அவரது மகன் கண்ணன்தான் பேசுவார்.உங்கள் அன்பும் ஆசி காரணமாக விரைவில் உடல் நலம் பெற்று பின்னர் உங்களுடன் பேசுவார்.

-எல்.முருகராஜ்.

...அதற்குபிறகுதான் தெரிந்தது விருது பெற இருக்கும் ஜெயராமன் இடுப்புக்கு கிழே இரண்டு கால்களும் இல்லாமல் இருப்பதை.அரங்கம் முழுவதுமே அப்படியொரு அமைதி. எப்படி இவரால் இந்த நிலமையில் உழவாரப்பணியில் ஈடுபட முடிந்தது என்று அனைவருக்குமே ஆச்சர்யம்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us