PUBLISHED ON : ஜூன் 09, 2015 12:00 AM

84 வயது சிறந்த ஆசிரியர் ஜானகி கிருஷ்ணன்.
ஜானகி கிருஷ்ணன்
சென்னை அடையாறைச் சேர்ந்தவர்
84 வயதைத்தொட்டுள்ள இவர் நினைவு தெரிந்த நாள் முதல் நகையோ உயர் ரக ஆடையோ அணிந்தது இல்லை.இதற்காக அவரைப்பற்றி இங்கே கட்டுரை எழுத வரவில்லை.பெண் என்பவள் மகா சக்தியானவள் ஆனால் தனக்குள் உறங்கிக்கிடக்கும் அந்த சக்தியை மறந்துவிட்டு சாதாரணமாக இருக்கிறாள் அவளது சக்தியை அவளுக்குள் உணர்த்துவதே தன் வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் இவர்.
இதற்காக இவர் எடுத்துக்கொண்ட விஷயம் கல்வி.இதற்கு வழிவகுத்துக்கொடுத்துதும் கொடுத்துக்கொண்டு இருப்பது இந்திய-ரஷ்ய கலாச்சார அமைப்பாகும்.
இந்திய-ரஷ்ய கலாச்சார மையமானது முன்பு இந்திய-சோவியத் கலாச்சார மையமாக இருந்தது. இதில் கடந்த 1950-ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கும் இவர் இந்த அமைப்பின் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் தலைவராகவும் கடந்த 70-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.
ரஷ்யாவிற்கு பல முறை சென்று வந்துள்ளார். இந்த அமைப்பின் கலாச்சார துாதுவராக ஆனபிறகு இங்கிருந்து அங்கும், அங்கு இருந்து இங்கும் பலர் போய்வர உதவியிருக்கிறார்.கலாச்சார பரிமாற்றத்தின் அடிப்படையில் கலாச்சாரங்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் இதன் மூலம் வழிவகுத்திருக்கிறார்.
அங்கு இருந்து இங்கு வந்தவர்கள் நமது கிராமங்களுக்கு அழைத்துச் சென்று பேசவிடும்போதுதான் நம்மால் குறிப்பாக பெண்களால் என்னவெல்லாம் சாதிக்கமுடியும் என்பதை எடுத்துச்சொல்லிவருகிறார்.
ரஷ்ய கல்வி முறையானது உன்னையே
கேள்வி கேட்டு உன்னிடம் இருந்தே பதில் வரவழைக்கும் தன்மையை கொண்டது ஆகவே
மனிதநேயத்தை அடிப்படையில் அமைந்த ரஷ்ய நாட்டு கல்வி கிராமபுற பெண்களுக்கு
செலவே இல்லாமல் கிடைக்கும் வழிகளை எடுத்துச்சொல்லி வருகிறார்.
ரஷ்ய மொழியில் பேச எழுத படிப்பதில் வல்லவரான ஜானகி கிருஷ்ணன் ரஷ்ய போகக்கூடியவர்கள் பயன்பெறும் வகையில் பாக்கெட் வடிவ புத்தகம் உள்ளீட்ட பல புத்தகங்களும், உச்சரிப்போடு ரஷ்ய மொழி சொல்லித்தரும் சிடிக்களையும் வெளியிட்டுள்ளார்.இது போக ஆர்வம் உள்ளவர்களுக்கு ரஷ்ய மொழியை இலவசமாகவே கற்றுத்தருகிறார்,இவரது மொழி பயிற்சிக்கு தானியாரெட்டி துணையாக உள்ளார்.
நட்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ள,நல்லதொரு கல்வியை கற்றுக்கொள்ள,நாகரீகமான கலாச்சாரத்தை புரிந்து கொள்ள ரஷ்யாவை புரிந்து கொள்ளுங்கள் அதற்கு உதவ நான் எப்போதும் தயாரக இருக்கிறேன் என்று சொல்லும் ஜானகி கிருஷ்ணனுக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள ரஷ்யா கலாச்சார மையத்தில் சிறந்த ரஷ்யா மொழி ஆசிரியருக்கான விருதினை மையத்தின் இயக்குனர் மிக்கேல் கார்படேவ்,செர்ஜி காட்டோவ் ஆகியோர் வழங்கினர்.
ஜானகி கிருஷ்ணனுடன் பேசுவதற்கான எண்:9840861231.
-எல்.முருகராஜ்.
