தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/ஜனாவின்,கண்ணாடி போட்டவன் கெட்டவன்.

ஜனாவின்,கண்ணாடி போட்டவன் கெட்டவன்.

ஜனாவின்,கண்ணாடி போட்டவன் கெட்டவன்.


PUBLISHED ON : ஆக 15, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு கையும், ஒரு காலும் இல்லாத இளைஞர் ஜனா எடுத்துள்ள 'கண்ணாடி போட்டவன் கெட்டவன்' என்ற நகைச்சுவையான படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வரவேற்றுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவரான ஜனா சிறு வயதில் மின்சார கம்பத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்கப்போன போது ஏற்பட்ட மின் தாக்குதலில் இரண்டு கைகளையும்,ஒரு காலையும் இழந்தார்.



கிட்டத்தட்ட இறந்து போய்விடுவார் என்ற நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகமே கைவிட்ட போது தந்தையும்,தாயுமாக,உறவும்,நட்புமாக இருந்து ஜனாவை நம்பிக்கையூட்டி வளர்த்தவர் அவரது அப்பா கேசவன்தான்.

வாயை வைத்து என் பிள்ளை பிளைத்துக்கொள்வான் என்று அப்பா அடிக்கடி சொல்வார், அதற்கேற்ப வாயினால் பிரஷ் பிடித்து இவர் வரைந்த ஒவியத்திற்கு ஜனாதிபதி மாளிகையில் வைத்து அப்துல்கலாம் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார்.



அப்படி உதட்டாலும், முழங்கையில் பிசிறு போல ஒட்டியிருந்த ஒரு சதைத்துண்டையே விரலாக்கி,கால்களை கைகளாக்கி கம்ப்யூட்டரில் எடிட்டிங் போன்ற சாதனைகளை நிகழ்த்தியதில் இவருக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

ஆனால் இவருக்குள் உறங்கிக்கிடந்த சினிமா கலைஞனுக்கு தொலைக்காட்சி நிறுவன வேலை சரியான தீனி போடவில்லை ஆகவே வேலையை விட்டுவிட்டு சினிமா எடுப்பதற்கு தயரானார்.எழுத்து இயக்கம் எடிட்டிங் என்று சினிமா தொடர்பான வேலைகளில் உதவியாளராக இருந்து தன்னை பட்டைதீட்டிக்கொண்டார்.



இனி நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்ததும் நண்பர்கள் உதவியுடன் சிறிய பட்ஜெட்டில் நாற்பது நிமிடம் ஒடக்கூடிய படம் ஓன்றை தயாரித்து கடந்த 14/8/2016ந்தேதி சென்னை வடபழநி ஆர்கேவி திரையரங்கில் திரையிட்டார்.

ஜனா நடந்துவந்த பாதை கற்களும்,முற்களும் நிரம்பியது என்பதால் உடல் ஊனமுற்றவர்களின் வலியை, வாழ்க்கையை பார்ப்பவர்கள் மனம் நெகிழக்கூடிய வகையில் படத்தின் கதை இருக்கும் என்று நினைத்து போனால் அதற்கு நேர்மாறாக இருந்தது படம்.



என் சோகம் என்பது என்னோடு, என் படம் என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கவேண்டும் ஆகவே கண்ணாடி போட்டவன் கெட்டவன் என்ற எண் படம் காமெடி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

கதாநாயகன் சிறுவனாக இருக்கும் போது அவரது அப்பாவின் சாவிற்கு ஒருவன் காரணமாக இருக்கிறான்.கண்ணாடி போட்ட அந்த வில்லன் மீது ஏற்படும் கோபம் கண்ணாடி போட்ட அனைவரது மீதும் திரும்புகிறது.



வளர்ந்து இளைஞனான பின்னும் இவன் வீட்டிற்கு வரும் கண்ணாடி அணிந்த அவனது உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் படாதபாடு படுகின்றனர்.காதலுக்கு கூட கண்ணாடி தடையாக அமைந்துவிடுகிறது.

ஒரு கட்டத்தில் இவன் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ள இவனது உயிரைக்காப்பாற்றுபவர் கண்ணாடி போட்டவராக இருந்துவிடுகிறார் இன்னோரு திருப்பமாக கதாநாயகனே கண்ணாடி போடவேண்டிய நிலை வந்துவிடுகிறது.



கண்ணாடி போட்டுக்கொண்டு வெளியேவரும் கதாநாயகனின் அடுத்த நிலை என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போது தெருவில் செல்லும் ஒரு சிறுமி தன் கண்ணாடியை தவறவிடுகிறாள், கதாநாயகன் ஒடோடிப்போய் அந்த கண்ணாடியை எடுத்து துடைத்து சிறுமியின் கண்களின் மாட்டிவிடும் டைரக்டர் டச்சுடன் படம் கிட்டத்தட்ட நிறைவடைகிறது.

கதாநாயகனை தேடிவரும் உறவுக்காரர் கண்ணாடி இல்லாமல் எங்கோ பார்த்து பேசுவது,வில்லன்கள் அடிக்கடி வாங்கிக்கட்டிக் கொள்வது என படம் முழுவதும் நகைச்சுவை நன்றாக உள்ளது.தியேட்டரில் எழுந்த சிரிப்பலைகள் ஜனாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டுக்கள்.



படம் எந்த படத்தின் பாதிப்பிலும் இல்லை என்பதோடு படத்தின் கலைஞர்களும் எந்த கலைஞர்களின் பாதிப்பும் இல்லாமல் இருந்தது என்ற இரண்டு விஷயமுமே ஜனாவிற்கு கிடைத்த வெற்றிகள்தான்.எதிலும் சமரசம் செய்து கொள்ளாததால் பெரிய படத்திற்கு உரிய தரத்துடன் ஒலி,ஔிப்பதவு போன்ற அம்சங்களும் அமைந்திருந்தது.

நல்ல தயாரிப்பாளர் முன் வந்தால் ஜனா இந்த படத்தை பெரிய திரைப்படமாக்கிவிடுவார் தமிழ் சினிமாவிற்கு ஒரு மகத்தான கலைஞனாக ஜனா கிடைப்பார்.

அது விரைவில் நடக்கும் என நம்புவோமாக..



டைரக்டர் ஜனாவிடம் பேசுவதற்கான எண்:9092590975.அப்பா கேசவன்:9791230461.

-எல்.முருகராஜ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us