sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 14, 2026 ,மார்கழி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

பிர்சா முண்டா

/

பிர்சா முண்டா

பிர்சா முண்டா

பிர்சா முண்டா


PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1345279பிர்சா முண்டா

நேற்று முழுவதும் தேசமெங்கும் இவரது பெயரே முணுமுணக்கப்பட்டது

பிரதமர் முதல் தமிழக கவர்னர் வரை இவரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நவம்பர் 15 ஆம் தேதியான நேற்று இவரது பிறந்த நாள்,இந்த நாளை பழங்குடியினர் தினமாக அறிவித்திரந்த பிரதமர் அவரது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் பழங்குடியின மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் தலைநகரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பழங்குடியின தலைவர்களில் இவரது படம் மட்டும்தான் நாடாளுமன்ற மத்திய மண்டபத்தை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவரது பெயரில் பல்வேறு விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள், தொழில் கூடங்கள் துவங்கப்பட்டுள்ளன.Image 1345281இத்துணை பெயரும் புகழும் பெற்ற இவர் வாழ்ந்த காலம் மொத்தமே 25 ஆண்டுகள்தான்.

1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார்.

இவரது காலத்தில் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக ஜாமீன்தார்கள் இருந்தார்கள்.

இத்தகைய ஜமீன்தார்கள் பழங்குடியின மக்களுக்கு கடன் கொடுக்கிறேன் என்று வஞ்சக விலை விரித்து அவர்களது நிலங்களை பிடுங்கிக் கொண்டனர் இதற்கு ஆங்கிலேயே அரசும் துணைபோனது.

தங்கள் சொந்த நிலத்திலேயே அடிமைகளாக பழங்குடியின மக்கள் வாழ்ந்தனர் அவர்களில் ஒருவராக இருந்த பிர்சா முண்டா இந்த கொடுமைக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காக கொதித்தெழுந்தார்.ஜமீன்தார்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆங்கிலேய அரசை எதிர்த்தார்.

ஆங்கிலேயே அரசாங்கம் இவரை மிகச் சாதாரணமாக நினைத்தது ஆனால் இவர் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை துவக்கினார்,நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களை ஒன்று திரட்டினார்.

பல்வேறு போராட்டங்களை முன்வைத்து நிலங்களை மீட்டு பழங்குடியினரிடம் ஒப்படைத்தார்,நிலம் எங்களுடையது,உழைப்பு எங்களுடையது,அதன் விளைச்சலும் எங்களுடையதே உனக்கு எதற்கு வரி என்று ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயே அரசு இவரை ஒழித்துக்கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து தோற்றதது ஒரு கட்டத்தில் இவருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய படையையே அனுப்பியது, காட்டுக்குள் பதுங்கியிருந்து கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயே படை வீரர்களை துவம்சம் செய்தார்.

இடைவிடாத போராட்டத்திற்கு பின் பிர்சா முண்டாவை கைது செய்த ஆங்கிலேயே அரசு அவரை சிறையில் வைத்து செய்த கொடுமை காரணமாக தனது 25 வயதிலேயே இறந்து போனார்.

பிர்சா முண்டாவின் கொள்கைகளை முழக்கங்களை முன்வைத்து அதன்பின் எழுச்சியுடன் பழங்குடியின மக்களை எடுத்துக் கொண்ட போராட்டம் பின் பல வெற்றிகளைக் கொடுத்தது.

அப்பகுதி மக்கள் இவரை அப்போதும் இப்போதும் 'மண்ணின் மைந்தன்' (தர்த்தி அபா) என்றே அழைக்கிறார்கள்,அப்படிப்பட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை அவர் பிறந்த மாநிலமான ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலத்தில் பெரிய அளவில் நேற்று கொண்டாடினர்.

-எல்.முருகராஜ்.






      Dinamalar
      Follow us