sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

பொங்கல் பரிசாக புதிய பகுதியுடன் ஸ்ரீ தியாகராஜர் 175

/

பொங்கல் பரிசாக புதிய பகுதியுடன் ஸ்ரீ தியாகராஜர் 175

பொங்கல் பரிசாக புதிய பகுதியுடன் ஸ்ரீ தியாகராஜர் 175

பொங்கல் பரிசாக புதிய பகுதியுடன் ஸ்ரீ தியாகராஜர் 175

1


PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1367723ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் (1767-1848)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர்.

தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இசை ஞானி.

வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்பர், காரணம் வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்தார். இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியுள்ளார்.

மிகச் சிறந்த ராமபக்தர்.

ராமரைப்பாடிய வாயால் மனிதர்களைப் பாடமாட்டேன் என்று தன்னை அழைத்துப் பாடச்சொன்ன தஞ்சை மன்னரிடமே சொல்லியவர்.

ராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் இவரிடம் ராம நாமத்தை 96 கோடி முறை ஜெபிக்கும் படி கூறினார் அதனடிப்படயில் இச்செயலை 21 ஆண்டுகளில் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 1,25,000 முறை ராமநாமத்தைச் செபித்து வந்தார். இதனால் பல தடவைகள் ராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது.

நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து 'ஸ்வரார்ணம்' என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.

இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாறில் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

திருவாரூர் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சங்கீத மும்மூர்த்திகளின் விழாவின் போது, தியாகராஜ சுவாமிகளும் சிறப்பிக்கப்படுகிறார்.

இப்படி பல சிறப்புகளும் பெருமையும் பெற்ற தியாகராஜர் பற்றியும் அவரது வாழ்க்கயைில் நடந்த அற்புதங்கள் குறித்தும் சுவாரசியமாக தொகுத்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், பிரபல நாடக இயக்குனர் நடிகர் டிவி வரதராஜன் ஸ்ரீ தியாகராஜர் என்ற இசை நாடகத்தை தயாரித்து இயக்கி அவரே தியாகராஜரும் நடித்துள்ளார்.

ராமபக்தியாலும்,நாமசங்கீர்த்தனத்தாலும் படித்தவர்களையும்,பாமரர்களையும் ஒரு சேர பரவசப்படுத்திய மகான் தியாகராஜர் பற்றிய இந்த இசை நாடக்திற்கு உணர்வுபூர்வமாய் வசனம் எழுதியிருப்பவர் பிரபல எழுத்தாளர் வீயெஸ்வியாவார், இதற்கு உயிரோட்டமாய் இசை அமைத்திருப்பவர் பாம்மே ஜெயஸ்ரீ ஆவார்.

இசையும்,இறையுணர்வும் இரண்டறக் கலந்த இந்த நாடகத்தைப் பார்த்த காஞ்சி சுவாமிகள் முதல் கம்பவாரி ஜெயராஜ் வரை மனம் நெகிழ்ந்து பாராட்டியிருக்கின்றனர்.இதன் காரணமாக நம்நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா,ஆஸ்திரேலியா,துபாய் உள்ளீட்ட நாடுகள் பலவற்றிலும் இதுவரை 174 முறை இந்த இசை நாடகம் மேடையேறியுள்ளது.

திருவையாறு தியாகராஜ சுவாமிகள் சன்னதியில் இந்த வருடம் ஆராதனை துவங்கும் அதே நாளில் (14/01/2025-பொங்கல் திருநாளில்) அவரது இசை நாடகமான ஸ்ரீ தியாகராஜர் நாடகம் 175 முறையாக சென்னை வாணிமகாலில் மேடையேறுகிறது.Image 1367725இந்த இசை நாடகத்தில் ஒரு சிறப்பாக இதுவரை இல்லாத ஒரு முக்கிய நிகழ்வு சேர்க்கப்பட்டுள்ளது.அவர் சங்கீத மும்மூர்திகளின் சமகாலத்தவர் மட்டுமின்றி, அவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டிவந்தார் ஆகவே அவர்கள் மூவரும் இணைந்து ராமகீர்த்தனை பாடுவது போல ஒரு அற்புத நிகழ்வும் அன்றைய நாடகத்தில் சேர்க்கப்படும்.பொங்கல் பரிசாக அமைந்துள்ள இந்த இசை நாடகத்தை அனைவரும் பார்த்து ரசிப்பதே படைப்பாளிகளுக்கு நாம் தரும் விருது.

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:94440 69292,

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us