sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

பாடித்திரியும் பறவைகளே..

/

பாடித்திரியும் பறவைகளே..

பாடித்திரியும் பறவைகளே..

பாடித்திரியும் பறவைகளே..

1


PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1394375வெயில் நன்றாகவே பொழிந்து கொண்டிருந்த நேற்றைய உச்சிப் பொழுது

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்றிருந்தேன்.

வெளிநாடுகளில் இருந்து வலசையாக வந்திருந்த பல்வேறு இனப்பறவைகள் அங்கு இங்குமிங்குமாக பறந்து கொண்டிந்தன.

அங்கே அதிகமாக காணப்பட்டது வண்ண நாரைப்பறவைதான்.

அந்தப் பறவைகளில் பல தனது சிறகை விரித்து ஒரு மாதிரியாக உட்கார்ந்திருந்தன.Image 1394377பார்க்க வித்தியாசமாக இருந்தது.,அங்கிருந்த வனத்துறை ஊழியரிடம் அந்த வித்தியாசம் பற்றி விசாரித்தேன்

நன்றாக பாருங்கள் அந்த மாதிரி உட்கார்ந்திருக்கும் பறவைகளின் நிழலின் அதன் குஞ்சுகள் அமர்ந்திருக்கும் என்றார்

உற்றுப்பார்த்த போதுதான் அவர் சொன்னது நிஜம்தான் என்பது தெரிந்தது.

அதற்கான காரணம்தான் இந்த கட்டுரை.

மனிதர்களே நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு நிழலை நாடி ஒதுங்கும் போது அடிக்கிற மொத்த வெயிலையும் தன் முதுகில் வாங்கிக் கொண்டு, அந்த தாய்ப்பறவைகள் தனது இறக்கைகளை குடை போல விரித்து குஞ்சுகள் மீது வெயில் படாமல் பாதுகாக்கிறது.

சூரியன் தனது திசையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ளும் போதும் அதற்கேற்ப தன்னுடைய நிலையையும் மாற்றிக் கொள்ளும் அந்தத் தாய்ப்பறவைகள் எந்த நிலையிலும் தனது குஞ்சுகள் மீது வெயில் படாமல் பார்த்துக் கொள்கிறது, குழந்தைகளை பாதுகாக்கிறது.

அந்தப் பறவையின் தாய்ப்பாசத்தை பார்க்கும் போது மனம் நெகிழ்ந்துவிட்டது.

தனது அழகான வண்ண இறக்கைகளால் புகழ்பெற்றது, அதனால் இது 'Painted Stork' (வர்ணப்பட்ட நாரை) என்று அழைக்கப்படுகிறது.வர்ண நாரை (Mycteria leucocephala) என்பது Ciconiidae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய நீர்ப்பறவையாகும்.

வர்ண நாரையின் உடல் பெரும்பாலும் வெள்ளை நிறமாக காணப்படும், ஆனால் அதன் இறக்கைகளில் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு கலந்த அழகான வடிவங்கள் இருக்கும்.இதன் தலை வெளிர் மஞ்சள் அல்லது வெண்மை நிறமாக இருக்கும்.நீளமான, வளைந்த மஞ்சள் அலகு முக்கிய அடையாளமாகும்.கால்கள் நீண்டதாகவும் வெளிர் மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலுமாக இருக்கும்.

இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.நன்னீர் ஏரிகள், ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற இடங்களில் வாழ்வதற்குப் பிடிக்கும்.பறப்பது மட்டுமல்லாது, நீரில் நடந்து உணவு தேடுவதிலும் திறமை பெற்றது.

மீன்கள், சிறிய கடல் உயிரினங்கள், புழுக்கள், போன்றவை இதன் முக்கிய உணவாகும்.நீரில் மெதுவாக நடந்து, அதன் நீண்ட அலகைப் பயன்படுத்தி உணவை பிடிக்கிறது.

பெரும்பாலும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் அருகே மரங்களில் கூடு அமைக்கும்.கூட்டமாக வாழும் இயல்புடையவை; முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.குஞ்சுகளை தந்தையும் தாயும் சேர்ந்து வளர்க்கும்.

அதன் அழகிய நிறங்கள், நீளமான அலகு மற்றும் அமைதியான நடத்தை பார்க்கும் யாருக்கும் பிடிக்கும்.குறிப்பாக குழந்தைகளைக்கு இந்த பறவைகள் என்றால் கொள்ளைப்பிரியம்.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்தப் பறவை வருடம் தவறாமல் பல ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்து வலசையாக வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்கு வருகிறது.

இங்கே வந்த பிறகுதான் தனக்கான ஜோடியை தேர்ந்து எடுக்கிறது பின் தங்களுக்கான கூட்டை மரங்களின் மீது உருவாக்குகிறது.

அந்த மரம் தங்கள் இருவரை மட்டுமல்ல தங்களது குஞ்சுகளின் எடையையும் தாங்குமா என்று பல முறை பரிசோதித்து அதன்பிறகு கூட்டை மரக்குச்சிகளால் உருவாக்குகிறது.

தன் இணையுடன் இணைந்த பிறகு மூன்றில் இருந்து ஐந்து வரை முட்டையிடுகிறது முட்டையிட்டு நாள் முதல் இரு பறவைகளும் அந்த முட்டைகளை பாதுகாக்குகிறது அந்த முட்டை முப்பது நாட்களில் பொரிந்து குஞ்சுகள் வெளியானதும் அந்த பாதுகாப்பும் கவனமும் அதிகரித்துவிடுகிறது.

அதன்பிறகு தாய்பறவை அதிகமாக வெளியே போவதில்லை தந்தைப்பறவை மட்டும் ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து நான்கு முறை கூட்டில் இருந்து வெளியே போய் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தேவையான உணவுகளை சேகரித்துக் கொண்டு திரும்புகிறது,அந்த உணவை குஞ்சுகளுக்கு ஊட்டும் போது சற்று ரிலாக்சாக தாய்ப்றவை கொஞ்சம் நேரமும் துாரமும் பறந்து சென்று திரும்புகிறது.

வெயிலோ,மழையோ எதுவாக இருந்தாலும் அதன் பாதிப்பு தனது குஞ்சுகளுக்கு வராமல் பாதுகாக்கிறது.உணவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூட்டிற்கு இருட்டுவதற்கு முன் தந்தைப்பறவை திரும்பிவிடுகிறது பிறகு மொத்த குடும்பமும் சப்தம் எழுப்பி விளையாடி மகிழ்கிறது அதன் சந்தோஷ சப்தம் பார்வையாளர்களுக்கு சங்கீதம்.

அறுபது நாட்களில் அந்த குஞ்சுகள் வளர்ந்து பறக்கத் துவங்கிவிடும் அது பறந்து தனக்கான இறக்கையை தேடும் பக்குவம் வந்தவுடன் மொத்த குடும்பமும் கூட்டை விட்டு தங்கள் சொந்த நாட்டிற்கு பறந்து சென்றுவிடும்.

இது அத்தனையும் அக்டோபர் முதல் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும்.

அமைதியான அழகான பாசத்திற்கு எடுத்துக்காட்டான இந்தப் பறவையினம் சுற்றுச்சுழல்,உணவுப்பற்றாக்குறை,குறைந்துவரும் நீர்நிலைகள்,மற்றும் மனிதர்களின் தொந்திரவு காரணமாக அழிந்துவரும் அருகிவரும் பறவை இனங்களில் ஒன்றாக இந்த வண்ண நாரை இடம் பெற்றிருக்கிறது.

இந்த இனம் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையேல் அடுத்துவரும் தலைமுறை இந்த வண்ண நாரைப் பறவையை படமாகவும், ஓவியமாகவும்தான் பார்க்கும்..

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us