எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்
எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்நாட்டின் முதல் பெண் ரயில் டிரைவர் சுரேகா யாதவ்.
சுரேகா யாதவ், ஆசியாவின் முதல் பெண் ரயில்வே லோகோபைலட், 1965 செப்டம்பர் 2-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா நகரில் பிறந்தார். அவரது தந்தை ராம்சந்திரா போசாலே, விவசாயி; தாய் சோனாபாய். அவரது குடும்பம் விவசாயத்தைச் சார்ந்தது.
சுரேகா, சதாரா நகரில் உள்ள பள்ளி கல்வி முடித்தார். பிறகு, சதாரா மாவட்டத்தில் உள்ள கராத் நகரில் பொறியியலில் டிப்ளோமா படித்தார்.
2011-ஆம் ஆண்டு, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி, டெக்கன் குயின் ரயிலில் பெண் இயக்குனராகப் பணியாற்றி, ஆசியாவின் முதல் பெண் ரயில்வே லோகோபைல்டாகப் புகழ்பெற்றார். அவரது சாதனை, பெண்கள் ரயில்வே துறையில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதை நிரூபித்தது.
சுரேகா யாதவ், 1990-ஆம் ஆண்டு, காவல்துறையில் பணியாற்றும் சங்கர் யாதவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சுரேகா யாதவ், தனது சாதனைகளால், இந்திய ரயில்வே துறையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.சுரேகா யாதவ், தனது 36 ஆண்டுகள் நீடித்த பணியின்போது, பெண்கள் ரயில்வே துறையில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். அவரது சாதனைகள், பெண்களுக்கு தொழில்முனைவோராகவும், சமூக முன்னேற்றத்திற்கான முன்னணி வீரர்களாகவும் செயல்பட ஊக்கமளிக்கின்றன.
இந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் இவர் கூறுகையில் ,'ஒரு இயந்திரம் பாலினத்தைப் புரிந்துகொள்ளாது; அது இயக்குபவரின் திறமை மற்றும் உறுதியை மட்டுமே மதிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்,உண்மைதானே அதற்கு சாட்சியமே அவர்தான்.
-எல்.முருகராஜ்