PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

![]() |
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கண் பார்வைக்கு அது ஈடாகாது என்பது பார்வையற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதன் காரணமாக பார்வையற்றவர்களுக்கு பார்வையை மீட்டுத்தர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த முயற்சியின் ஆராய்ச்சியின் விளைவே 'ஸ்மார்ட் கிளாஸ்'.
முழுமையாக இல்லாவிட்டாலும் பார்வையால் கிடைக்கக்கூடிய பலன்களில் சிலவற்றையாவது கொடுக்க ஆராய்ச்சிகள் தொடர்கிறது.
![]() |
பார்வையற்றவர்கள் இந்த 'ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் விசேஷ கண்கண்ணாடியை போட்டுக் கொண்டால், ஆங்கிலம் உள்பட 73 மொழிகளில் உள்ள புத்தகத்தை படிக்கலாம்.
எதிரே இருப்பவர்கள் ஆணா பெண்ணா அவர் எந்த வயதைச் சேர்ந்தவர் என்பதை அறியலாம்.நடந்து செல்லும் பாதையை சரியாக அறிந்து செல்லலாம்.கம்ப்யூட்டர் திரையில் உள்ளதை புரிந்து கொள்ளலாம்.
இப்படி பலவித பயன்பாடுகளைத்தரும் கண்ணாடியை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது.இந்த கண்ணாடி ஒன்றின் அடக்கவிலை 35 ஆயிரம் ரூபாயாகிறது.
சென்னையில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் கிண்டி என்ற சமூக சேவை நிறுவனம், சுமார் 45 லட்சும் ரூபாய்க்கு கண்ணாடிகளை வாங்கி,ஏழை,எளிய பார்வையற்றவர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறது.
![]() |
சென்னை தி.நகர் ராஜன் கண் மருத்துவமனையில் இதற்காக நடைபெற்ற விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் உள்ளீட்ட பல்வேறு பிரமுர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அரங்கில் எத்தனையோ விழாகள் நடந்து உள்ளன ஆனால் என் இதயம் தொட்ட விழா இது.,காரணம் எளியவர்களின் விழிகளில் இந்த கண்ணாடி ஏற்றப்போகும் உன்னத ஒளி அப்படிப்பட்டதாகும்.
பார்வை இழப்பு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடுகின்றனர், ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அந்த காரணங்களை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கிளாஸ் ஒரு வரமே என்றார் ராஜன் கண் மருத்துவ மனை இயக்குனர் மோகன் ராஜன் நெகிழ்சியாக..
அது உண்மைதான் என்பதை கண்ணாடி அணிந்து கொண்டு சிரித்த பார்வையாளர்களின் சிரிப்பைப் பார்த்து உணர முடிந்தது.
-எல்.முருகராஜ்



