PUBLISHED ON : நவ 25, 2025 05:04 PM

பிரேசிலின் அமேசான்ஸ் மாநிலத்தில் உள்ள டபாவு நகரம் அருகில் உள்ளது அபுபாரி உயிரியல் பாதுகாப்பு மையம்.
இது உலகின் முக்கியமான ஆமை இன பாதுகாப்பு நிலையங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அங்கு முதன்மையாக பாதுகாக்கப்படும் இனங்களில் ஒன்று பொடனெமிஸ் எனப்படும் தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆமையாகும்.



உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அந்தச் சிறு ஆமை குஞ்சுகள் நீரை நோக்கி முன்னேறத் தயாராக இருக்கும் அப்போது அது மென்மையாக சப்தமிடுகிறது அது உண்மையில் சத்தம் அல்ல உயிர்வாழப் போகும் சந்தோஷம்.
சில குஞ்சுகள் மணலில் தவழ்ந்து செல்ல தடுமாறும்; அப்போது தன்னார்வலர்கள் அதற்கு உதவி சரியான பாதையில் பயணிக்க செய்வர் , மாலை மங்கி இரவு துவங்கும் நேரத்தில்தான் பெரும்பாலும் ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் செல்லும் அந்த இருளில் அவைகளுக்கு வழியைக் காட்டும் விதத்தில் மெலிதாக டார்ச் லைட் விளக்கொளி காட்டுவர்.
ஆமைக்குஞ்சுகள் தண்ணீரைத் தொடுவதற்குள் அலைகள் வந்து அன்போடு ஆதரவோடு அனைத்து தன்னுள் அழைத்துச் செல்கிறது,தனக்கான உறைவிடத்திற்கு வந்துவிட்ட உணர்வோடு உற்சாகத்தோடு அவைகள் கடலுக்குள் தங்கள் வாழ்க்கையை துவங்கிட செல்கிறது.
அவைகளை வாழ்த்தி வழியனுப்பிவைப்போம்
-எல்.முருகராஜ்.

