PUBLISHED ON : டிச 25, 2024 12:00 AM

சீனாவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மொபைல் போன் பார்க்க தடைவிதித்துள்ளனர்.அவர்கள் எங்குமே மொபைல் போன் பார்க்ககூடாது.குறிப்பிட்ட துாரத்தில் இருந்து குறிப்பிடப்பட்ட குழந்தை சானல்களை குறுகிய நேரம் வரை டி.வி.,யில் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்.மொபைல் போன் மட்டுமின்றி டேப்லெட்,ஐபேடு,கம்ப்யூட்டரை பார்க்கவே கூடாது என்று உத்திரவு போட்டுள்ளனர்.
நம்முடைய நிலமை மிக மோசம் அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி என்று ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தை கேட்டு கெஞ்சுகிறதே என்று எண்ணி மொபைல் போனைக் கொடுத்து கெடுத்துவருகிறோம்.
இப்போது கண் பார்வைக்கு குறைபாடுள்ள குழந்தைகள் கனத்த கண்ணாடி போடவேண்டும், அடிக்கடி பரிசோதனைக்கு வந்து 'பவரை' சரிபார்த்துக் கொள்ள வேண்டும், கண்ணாடியை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும் இப்படியான தொடர் தொல்லையில் இருந்து விடுபட ஒரே வழி மொபைல் போன் பார்க்காமல் இருப்பதுதான்.
அது மட்டுமல்ல குழந்தைகளை காற்றோட்டமுள்ள திறந்த வெளியில் வெயிலில் ஒவ்வொரு நாளும் விளையாட அனுமதியுங்கள், கீரை,காய்கறி,மீன்,முட்டை போன்ற கண்ணுக்கு நன்மை செய்யும் உணவுகளை கொடுங்கள்.
சென்னையில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கண் பார்வை குறைபாடுள்ள ஆயிரம் குழந்தைகளுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கும் விழா நடைபெற்றது, அந்த விழாவில் பேசும் போதுதான் டாக்டர் ராஜன் இப்படி உருக்கமாக பேசினார்.
--எல்.முருகராஜ்