sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : நவ 11, 2024

Google News

PUBLISHED ON : நவ 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகவும், பழங்குடியின மக்களின் அடையாளமாகவும் விளங்கிய யாரின் 150வது பிறந்தநாளை (நவ. 15), நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்?

அ. வீர் சாவர்க்கர்

ஆ. பிர்ஸா முண்டா

இ. தலக்கால் சந்து

ஈ. ராம்ஜி கோண்ட்

2. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மொத்தம் 37.50 ஜிகாவாட் திறன் கொண்ட, எத்தனை சோலார் பூங்காக்களை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ. 50

ஆ. 25

இ. 30

ஈ. 40

3. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸின் மூதாதையர் வசித்த கிராமமான துளசேந்திரபுரம், தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

அ. அரியலூர்

ஆ. கோவை

இ. செங்கல்பட்டு

ஈ. திருவாரூர்

4. இந்திய அரசின் நாணய அச்சடிப்பு நிறுவனம், இந்தியாவின் எந்த இரு பகுதிகளில் இயங்கி வருகிறது?

அ. சென்னை, பெங்களூரு

ஆ. மும்பை, ஹைதராபாத்

இ. கோல்கட்டா, ஆக்ரா

ஈ. ஜெய்ப்பூர், நாக்பூர்

5. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுடன், பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளனர்?

அ. ஐந்து

ஆ. எட்டு

இ. ஆறு

ஈ. மூன்று

6. பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவரும், பொருளாதார நிபுணருமான யார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்?

அ. ஷியாம் குல்கர்னி

ஆ. விவேக் சந்த்

இ. விவேக் டெப்ராய்

ஈ. சரவண பிரசாத்

7. இந்தியா -- பூட்டான் இடையேயான முதல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, எந்த மாநில எல்லையில் உள்ள டரங்கா எனும் பகுதியில், சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது?

அ. மேற்குவங்கம்

ஆ. சிக்கிம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. அசாம்

8. இந்திய ஹாக்கி அணி தனது எத்தனையாவது ஆண்டில், சமீபத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது?

அ. 150

ஆ. 50

இ. 100

ஈ. 75

விடைகள்: 1.ஆ, 2.அ, 3.ஈ, 4.ஆ, 5.இ, 6.இ, 7.ஈ, 8.இ.






      Dinamalar
      Follow us