நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேனல் 4 தொலைக்காட்சி, லண்டனில் 'சிறார் மேதை சாம்பியன்' எனும் தலைப்பில் சிறார்களுக்கான வினாடி வினா போட்டியையும் அதைத் தொடர்ந்து பல போட்டிகளையும் நடத்தியது. கடுமையான அளவில் நடைபெறும் இப்போட்டிகள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார் 12 வயதே ஆன ராகுல். தெற்கு லண்டனில் வசித்து வரும் இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரோனனை 10 - 4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.
ராகுல், வெற்றிக்கோப்பையைப் பெறும்போது, தமது பெற்றோருக்கும் சிறப்பாக கடைசிவரை தன்னோடு போட்டியிட்ட ரோனனுக்கும் நன்றி தெரிவித்தார். ராகுலின் தந்தை, தகவல் தொழில்நுட்பத்துறையிலும், தாய் மருத்துவத்துறையிலும் பணியாற்றுகின்றனர்.

