PUBLISHED ON : ஆக 28, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனிமனித ரகசியங்கள் (தனியுரிமை) அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று ஏற்கெனவே ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், அப்போது ஆதார் திட்டம் எல்லாம் இல்லை. தற்போது நாடு முழுவதும் ஆதார் எடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இது இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. ஆதார் முறை தனிமனித ரகசியங்களை மீறுவதகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த 9 பேர் கொண்ட நீதிபதிகளின் குழு, தனிமனித ரகசியம் என்பது அடிப்படை உரிமையே என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், ஆதார் கட்டாயமா இல்லையா என்பது பற்றி நீதிமன்றம் ஏதும் சொல்லவில்லை.

