உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 01, 2018

அ நிறம் | அளவு
கடந்த ஆண்டு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருமானம் ஈட்டிய 20 நகரங்களின் பட்டியலை மாஸ்டர் கார்டு நிறுவனம் (Mastercard) வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 162 நகரங்களில், தாய்லாந்தின் பாங்காக் நகரம் முதலிடத்தையும், லண்டன் இரண்டாமிடத்தையும், பாரீஸ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. பாங்காங் நகருக்கு 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். லண்டனுக்கு 1.9 கோடி பயணிகளும், பாரீஸுக்கு 1.7 கோடி பயணிகளும் சென்றுள்ளனர். முதல் 20 நகரங்களில், இந்திய நகரம் எதுவும் இடம்பிடிக்கவில்லை. சுற்றுலாவாசிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்காக இத்தகவலை மாஸ்டர்கார்டு வெளியிட்டுள்ளது. மேலும், இது சுற்றுலா தலங்களின் தரவரிசை அல்ல என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
