தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/400 வார்த்தை பேசும் அதிசய கிளி!

400 வார்த்தை பேசும் அதிசய கிளி!

400 வார்த்தை பேசும் அதிசய கிளி!


PUBLISHED ON : மே 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விநோத செல்லப் பிராணிகளில் பறவைகளுக்கும் இடம் உண்டு. ராயப்பேட்டையில் உள்ள முகம்மது ரியாஸ் பற்றித் தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் வீட்டில் 'லீ' என்ற ஆப்பிரிக்க சாம்பல் கிளி அன்பாக வரவேற்றது. பறவைகளைப் பிடித்தவர்களுக்கு எப்போதுமே ஆப்பிரிக்க சாம்பல் கிளி மீது ஒரு கண் உண்டு. ரியாஸ் இக்கிளியை தம் வீட்டின் ஒரு உறுப்பினர் போல் வளர்த்து வருகிறார்.

இந்தக் கிளியை வளர்க்கக் காரணம்?

இதோட அபார திறமை தான் காரணம். உலகத்திலேயே அதிக திறமையான கிளிகள் வரிசையில் இதுக்குத்தான் முதலிடம். அதனாலதான் இதை வாங்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.

கிளிக்கு ஏன் 'லீ'ன்னு பேரு?

லீ, ஒரு கால்பந்து வீரர் பேரு. எனக்குப் பிடிச்ச வீரர். கிளிகளுக்குப் பொதுவா பெயர் சொல்லிக் கூப்பிடறது ரொம்ப பிடிக்கும். அதனால் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பேரு வெச்சேன்.

கூண்டுக்குள்ளேயே இருக்குமோ?

இல்ல.. சாப்பாட்டுக்கும், தூங்கறதுக்கும்தான் கூண்டுக்குள்ள போகும். மற்ற நேரங்களில் வீட்டுக்குள் சுத்தி விளையாடும். இதோட இறக்கைகளை க்ளிப் பண்ணியிருக்கேன். அதனால பறக்காது. இதுவும் ரொம்ப சாமர்த்தியமானது. பறக்கணுமா, பறக்க வேணாமான்னு எல்லாத்தையும் இதுவே இடத்துக்கு ஏத்த மாதிரி முடிவு பண்ணும்.

இதனோட பராமரிப்பு எப்படி?

ரொம்ப கவனமா இருக்கணும். நல்ல உணவு கொடுக்கறது முக்கியம். காலையில கார்ன் ஃபிளேக்ஸ் கொடுப்போம். மதியம் ஆப்பிள், கொய்யா, பப்பாளி பழங்களை நறுக்கித் தருவோம். மாலையில விதைகள். வாரத்துக்கு ஒருமுறை குளிச்சு விடுவோம். காற்றோட்டமான இடம் இருந்தால் போதும். பெரும்பாலும், நம்ம கையால சாப்பிட விரும்புவார்கள். காலையிலும் மதியமும் நான் கொடுப்பேன். மாலை வீட்டில் இருப்பவர்கள் கொடுப்பார்கள்.

இதனோட தனித்துவம் என்ன?

400 வார்த்தைகளுக்கு மேல் இதனால ஞாபகம் வெச்சுக்க முடியும். அதனால இதோட வார்த்தை விளையாட்டு விளையாட முடியும். காது ரொம்ப ஷார்ப், நீங்க சும்மா ஏதாச்சும் வார்த்தையைத் தெரியாம சொன்னாக் கூட இது ஞாபகம் வெச்சுக்கும். நீங்க எதிர்பார்க்காத சமயத்துல எடுத்து விடும், பாருங்க! அவ்வளவுதான், ஆடிப் போயிடுவீங்க! அதனாலேயே, நாங்க எல்லோருமே ரொம்ப கவனமா பேசுவோம். ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது விளையாடுவோம். மனசு அவ்வளவு லேசாயிடும். வயசானவங்க, சின்னவங்க யாரா இருந்தாலும், இவனைப் பிடிக்காதவங்க இருக்க மாட்டாங்க.

இதுக்காக ஏதாச்சும் தியாகம் செய்திருக்கீங்களா?

தியாகம் இல்லாமையா? வீட்டுல எல்லாரும் சேர்ந்து வெளியே போக முடியாது. ஊருக்கு போறதுன்னா கூட யாராச்சும் ஒருத்தர் வீட்டுல இருந்தே ஆகணும். மற்ற செல்லப்பிராணிகளைக் கூட ஒரு நாளாச்சும் தனியா விட்டுட்டுப் போக முடியும். ஆனா, 'லீ' வீட்டில் யாரும் இல்லை என்றால் கூச்சல் போட்டுவிடும். அதனால், வீட்டுல யாராவது இருந்துக்கிட்டே இருப்போம். அதனால சிலசமயம் குடும்பத்தோட என்னால வெளியே போக முடியாது.

புத்திசாலி பறவையை வளர்க்கறது கொஞ்சம் கஷ்டம்தான் போல?

அப்படின்னு சொல்ல முடியாது... ஒருநாளைக்கு 2 மணி நேரமாவது நீங்க ஒதுக்கணும். அப்படிச் செய்ய முடியாதுன்னா, தயவுசெய்து வளர்க்க வேண்டாம்... ஏன்னா, வீட்டில் மக்கள் இல்லை என்றாலோ, விளையாட ஆட்கள் இல்லை என்றால் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிடும். இதை வாங்கறதுக்கு முன்னாடி 100 முறை யோசிங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us