தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெண்களின் 66 சதவீத உழைப்புக்கு ஊதியமில்லை

பெண்களின் 66 சதவீத உழைப்புக்கு ஊதியமில்லை

பெண்களின் 66 சதவீத உழைப்புக்கு ஊதியமில்லை


PUBLISHED ON : நவ 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக அளவில், இந்திய ஆண்களைவிட இந்தியப் பெண்கள் செய்யும் 'ஊதியமற்ற வேலை' மிக அதிகம் என்று தெரிவித்துள்ளது உலக பொருளாதார மையம். 'ஊதியமற்ற வேலை' என்பது அன்றாடப் பணிகள், ஷாப்பிங், குடும்ப உறுப்பினர்களைப் பராமரித்தல், குடும்ப உறுப்பினரல்லாதவர்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுதல், வீட்டுவேலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் பயணம், மற்றும் வேறு பல வேலைகளையும் உள்ளடக்கியது. இதில் உலக அளவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.

அதிலும் இந்தியாதான் முன்னணியில் நிற்பதாகத் தெரிவிக்கிறது உலகப் பொருளாதார மையத்தின் அறிக்கை. இதன்படி, இந்தியப் பெண்கள் செய்யும் 66 சதவீத வேலைக்கு ஊதியம் கிடைப்பதில்லை. இதனோடு ஒப்பிடும்போது, ஆண்கள் செய்யும் 12 சதவீத வேலைக்கே ஊதியம் கிடைப்பதில்லை.

பொருளாதாரத்துக்குப் பங்களிப்பதில் பெண்களின் ஈடுபாடு குறைவாக இருப்பதாலும், குறைவான ஊதியத்தினாலும், இந்திய பணியிடங்களில் ஆண், பெண்களுக்கு இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதனால்தான், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, 21 இடங்கள் குறைந்து, இந்தியா 108வது இடத்துக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 144 நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தைப் பிடித்து, வேலையிடத்தில் ஆண் பெண் பாகுபாடு குறைவாக உள்ள நாடாகத் திகழ்கிறது.

ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியில் ஆண் பெண்களுக்கு இடையே இருந்த ஏற்றத்தாழ்வை இந்தியா வெற்றிகரமாக குறைத்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதேநேரம் இந்திய ஆண், பெண்களுக்கு இடையே இருக்கும் எழுத்தறிவு ஏற்றத்தாழ்வு குறையவில்லை. ஆண்கள் 80 சதவீதம் எழுத்தறிவு பெற்றிருக்க, பெண்கள் பெற்றிருப்பதோ 59 சதவீதம் மட்டுமே. அதேபோல், இந்திய சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் உள்ள பெண்கள், மொத்தமே 11 சதவீதத்தினர் தான்.

அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்தியாவில் பெண் பிரதமர் ஆட்சி செய்தும் இந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us