PUBLISHED ON : ஜன 02, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகத்தைச் சுற்றி பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இளைஞர், தன்னுடைய 27 வயதுக்குள் 97 நாடுகளை சுற்றிப்பார்த்து சாதனை படைத்துள்ளார்.
நார்வே நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டியன் லின்டிகர். இவர், 18 வயதில் உலகைச் சுற்ற கிளம்பினார். தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குள், 97 நாடுகளை சுற்றி வந்துவிட்டார்.
இதுகுறித்து லின்டிகர் கூறியதாவது: உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பது, என் சிறுவயது விருப்பம். என்னுடைய பெற்றோர் அதிக அளவில் பயணம் மேற்கொண்டதை பார்த்து, எனக்கும் இந்த ஆசை வந்தது. நான் சம்பாதித்த பணத்தை வைத்துத்தான், பயணம் மேற்கொண்டேன். நிறைய அனுபவத்தை, இந்த பயணம் கற்றுக் கொடுத்திருக்கிறது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தைரியமும், உலகின் எல்லா மக்களும் ஒன்றே என்ற புரிதலும் எனக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.