PUBLISHED ON : ஜன 02, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுறுசுறுப்பாக உழைப்பதற்கு பெயர் பெற்றவர்கள், ஜப்பானியர்கள். அதிக நேரம் வேலை பார்ப்பதால், ஜப்பானில் பலருக்கும் முதுகுவலி மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் விதமாக, ஜப்பானில் 'ஒட்டோனா மக்கி' (Otona Maki) என்ற சிகிச்சை முறையை உருவாக்கி உள்ளனர். இதன்படி, சுவாசிப்பதற்கு ஏதுவான மெல்லிய துணியால், உடல் முழுவதையும் மூடிவிடுவர். தாயின் வயிற்றுக்குள் குழந்தைகள் அமைதியாக இருப்பதைப்போல், இந்த துணிக்குள் கை கால்களை மடக்கி, 20 நிமிடங்கள் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், முதுகுவலி, மனச்சோர்வு நீங்கி, பச்சிளம் குழந்தைக்கு கிடைக்கும் உணர்வு கிடைப்பதாக, இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

