PUBLISHED ON : ஜன 02, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்க்டிக் பெருங்கடலில், வழக்கத்தைவிட வெப்பம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி செய்துவரும் கார்ஸன் கூறியதாவது: ஆர்க்டிக் பகுதியில் தற்போது தட்பவெட்பம் சில இடங்களில் 20 டிகிரி சென்டிகிரேடாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக அதிகம். பனிப்பிரதேசத்தில் தற்போது அதிக அளவில் தாவரங்கள் வளர்கின்றன. இதனால் பனி குறைவதுடன் அதிக அளவில் வெப்பத்தை உறிஞ்சவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது உலகம் முழுவதும் கடலின் பருவமுறைகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மனிதர்கள் செய்யும் தவறுகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.

