PUBLISHED ON : ஜன 02, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுப் பொருட்களைத் தெருவில் எரிப்பதால், அதிக அளவில் காற்று மாசுபடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, தெருவில் கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பையை எரிப்பதற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தடையை மீறினால், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதாவது, திறந்தவெளியில் சிறிய அளவில் குப்பையை எரித்தால், சுற்றுச்சூழல் இழப்பீடாக 5 ஆயிரம் ரூபாயும், பெரிய அளவில் குப்பையை எரித்தால், 25 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, அனைத்து மாநில அரசுகளும் நான்கு வாரங்களுக்குள் செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று, பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

