உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 08, 2017

அ நிறம் | அளவு
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நன்னம்மாள். இந்தியாவின் மூத்த யோகா பயிற்சியாளராக கருதப்படும் 98 வயதான நன்னம்மாள் பாட்டி, இப்போதும் கடினமான யோகாவை சர்வசாதாரணமாக செய்து அசத்தி வருகிறார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: 'எட்டு வயதிலிருந்தே யோகா செய்து வருகிறேன். திருமணத்துக்குப் பிறகு, எனது மாமனாரிடம் இருந்து யோகாவை முறையாகக் கற்று, பிறருக்கு அதை பயிற்றுவிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு, இன்று வரை ஒருநாள் கூட யோகா செய்யாமல் இருந்ததில்லை. இதுதான் என் இளமையின் ரகசியம். இதுவரை 600 யோகா ஆசிரியர்களை உருவாக்கியுள்ளேன்' என்கிறார் நன்னம்மாள்.
