தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நாசாவில் பறக்கப்போகும் தமிழன் சாட்டிலைட்

நாசாவில் பறக்கப்போகும் தமிழன் சாட்டிலைட்

நாசாவில் பறக்கப்போகும் தமிழன் சாட்டிலைட்


PUBLISHED ON : மே 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக மாணவர் உருவாக்கிய கையடக்க சாட்டிலைட், நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரான முகமது ரிஃபாத் ஷாரூக் கூறும்போது, 'மறைந்த எனது தந்தை, வானியல் பேராசிரியர். அவரைப் பார்த்து, எனக்கும் வான் ஆராய்ச்சி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஏற்கெனவே, தென்னிந்திய அளவில் இளம் விஞ்ஞானி விருதும், தேசிய அளவில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதும் பெற்றுள்ளேன். நாசா சார்பில் நடந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியில், உலக அளவில் 80 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். அதில், நான் மட்டும் இந்தியன். நான் வடிவமைத்த 64 கிராம் எடையுள்ள கையடக்க சாட்டிலைட், 3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரில், ஒரு லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூனில் நாசாவின் ராக்கெட்டில் எனது செயற்கைக்கோள் பறக்க உள்ளது. இச்சோதனை வெற்றி பெற்றால், விவசாயம், வானிலை குறித்த ஆய்வுக்கான சாட்டிலைட்களை குறைந்த செலவில் உருவாக்க முடியும்.' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us