தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முதலை பற்களை சுத்தம் செய்யும் பறவை

முதலை பற்களை சுத்தம் செய்யும் பறவை

முதலை பற்களை சுத்தம் செய்யும் பறவை


PUBLISHED ON : டிச 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ப்ளோவர்' (Plover)

உயிரியல் பெயர்: 'ப்ளுவியனஸ் ஏகிப்டியஸ்' (Pluvianus Aegyptius)


'ப்ளுவியானிடே' (Pluvianidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை. தலைப்பகுதி கறுப்பு நிறத்திலும், உடல் பழுப்பு நிறத்திலும் இருக்கும். கண்களைச் சுற்றி, முகமூடி அணிந்ததைப்போல கறுப்புப் பட்டை உண்டு. வயிற்றுப் பகுதி ஆரஞ்சு நிறத்திலும், கால்கள் நீல நிறத்திலும் இருக்கும். இந்தப் பறவையின் நீளம் சுமார் 21 செ.மீ.

இவை பொதுவாக, முதலைகளின் பற்களில் சிக்கியிருக்கும் இரையின் எச்சங்களை உண்கின்றன. இதன் மூலம் முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்கின்றன. முதலையின் வாய்க்குள் அமர்ந்து, அதன் பற்களில் சிக்கியுள்ள இறைச்சியை உண்ணும். அப்போது எந்த அச்சுறுத்தலையும் முதலைகள் ஏற்படுத்துவது இல்லை. முதலையின் பற்களில் உள்ள மாமிசத் துணுக்குகளையும், புழுக்களையும் உண்பதால், இவை 'முதலைப் பறவை' (Crocodile Bird - க்ரோகடைல் பர்டு) என்றும் குறிப்பிடப்படுகின்றன.

* ஆறுகள், சதுப்பு நிலம், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகின்றன.

* ஜோடிகளாகவும், சிறு குழுக்களாகவும் காணப்படும்.

* மணலில் சிறிய குழி தோண்டி, மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை இடும்.

* முட்டைகளை மண்ணால் மூடிவிடும். அதன் மேல் பகுதியில் அமர்ந்து அடைகாக்கும். குஞ்சுகள் பொரித்தவுடன் நடக்கத் தொடங்கும்.

* நீரில் உள்ள சிறு பூச்சி, புழுக்கள் இதன் உணவு.

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us