தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பறவைகள் பெற்ற வரம்

பறவைகள் பெற்ற வரம்

பறவைகள் பெற்ற வரம்


PUBLISHED ON : ஜூலை 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பறவைகள் பறப்பதற்கு உதவும் இறக்கை, பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள், அளவுகளால் ஆனது. இணையைத் தேர்ந்தெடுப்பதிலும், எதிரிகளிடமிருந்து தப்பிப்பதிலும் இறகுகளின் வண்ணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இறக்கை வகைகள்

01. கழுகு (Eagle)

* எதிரிடையாக உயரும் இறக்கைகள் (Passive Soaring Wings - பாசிவ் சோரிங் விங்ஸ்)

* அதிக உயரத்தில் பறக்கும் பறவைகளில் காணப்படும்.

02. கடற் காகம் (Sea Gull)

* நேரிடையாக உயரும் இறக்கைகள் (Active soaring wings -- ஆக்டிவ் சோரிங் விங்ஸ்)

* கடற்பறவை, நெடுந்தொலைவு பறக்கும் பறவைகளுக்கு இருக்கும்.

03. காகம் (Crow)

* நீள் வட்ட இறக்கைகள் (Elliptical wings - எலிப்டிகல் விங்ஸ்)

* சிறிய வகைப் பறவைகளில் காணப்படும். இறக்கைகளை வேகமாக அடிக்கும்.

04. உழவாரன் (Swifts)

* அதிவேக இறக்கைகள் (High-speed wings - ஹை ஸ்பீடு விங்ஸ்)

* இவை அதிவேகமாகப் பறக்க உதவுகின்றன.

05. தேன்சிட்டு (Hummingbird)

* தாழப் பறக்கும் இறக்கைகள் (Hovering wings - - ஹோவரிங் விங்ஸ்)

* தாழ்வான பகுதிகளில் வேகமாகப் பறக்கும் சிறிய வகைப் பறவைகளில் காணப்படும்.

- கிருபா நந்தினி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us