தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/டால்பின் மீனா?

டால்பின் மீனா?

டால்பின் மீனா?


PUBLISHED ON : ஜூலை 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீரில் வாழ்வதாலேயே டால்பின்களை மீன்கள் என நினைத்துக் கொள்கிறோம். டால்பின்கள் பாலூட்டி வகையைச் சார்ந்தவை. நீர்வாழ் உயிரினங்களான மீன்களுக்கும், பாலூட்டியான டால்பினுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

மீன் - Fish - டால்பின் - Dolphin

செவுள்களை உடைய நீர்வாழ் உயிரினம். - கடல்வாழ் பாலூட்டி உயிரினம்

உயிரின வரிசை: 'அபாராபைலடிக்' (Aparaphyletic) - உயிரின வரிசை: 'செட்டாசியா' (Cetacea)

முதுகெலும்புள்ளவை - பாலூட்டி

குளிர் இரத்தப் பிராணி - வெப்ப இரத்தப் பிராணி

நன்னீர், கடல் நீரில் வாழும் - பெருங்கடல்களில் மட்டும் வாழும்

செவுள்கள் வழியாக மூச்சு விடும் - நுரையீரல் வழியாக மூச்சு விடும்

முட்டை இடும் - குட்டி போடும்

சிறியதாக இருக்கும் - மிகப் பெரியதாக இருக்கும்

செதில்கள் உடைய தோல் பரப்பை உடையது - வழுவழுப்பான தோல் உடையது

தோல் பகுதியில் முடிகள் இருக்காது - தோல் பகுதியில் சில முடிகள் காணப்படும்

பக்கவாட்டில் வால் பகுதியை அசைக்கும் - வால்பகுதியை மேலும் கீழுமாக அசைக்கும்

குஞ்சுகளைப் பராமரிக்காது - குட்டிகளை, ஓரளவு வளரும் வரை பராமரிக்கும்

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us