உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 05, 2016

அ நிறம் | அளவு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, வளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட் இன்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதன் மூலம், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. 'ஸ்க்ராம்ஜெட்' (Scramjet)எனும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ராக்கெட்டில், ஆக்சிஜனுக்கு தனி கலன் வைக்கத் தேவையில்லை. அதனால் ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவும் செலவு, 10 மடங்கு குறையும்.
