உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 27, 2017

அ நிறம் | அளவு
திருப்பூரில் உள்ள பிளாடோஸ் அகாடமி மெட்ரிக் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், தமிழ்த்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தினமலர்- மாணவர் பதிப்பான 'பட்டம்' அரங்கு பலரையும் கவர்ந்தது.
தினமலரின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ்களைக்கொண்டே ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. 'வெட்டிக்கோ ஒட்டிக்கோ' படங்களை சுற்றிலும் ஒட்டி, பலரையும் கவர்ந்தனர். 7ம் வகுப்பு மாணவர்களான தீபக், பரணீதரன் ஆகியோர், இரண்டு ஆண்டுகளாக வெளிவந்த பட்டம் இதழ்களை மொத்தமாக பைண்ட் செய்து காட்சிப்படுத்தி இருந்தனர். இதனைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
