தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கேரளத்தில் டிஜிட்டல் மயமாக்கும் அரசுப் பள்ளிகள்!

கேரளத்தில் டிஜிட்டல் மயமாக்கும் அரசுப் பள்ளிகள்!

கேரளத்தில் டிஜிட்டல் மயமாக்கும் அரசுப் பள்ளிகள்!


PUBLISHED ON : நவ 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பல்வேறு அரசு நலத் திட்டங்களை செயற்படுத்தி வருகிறார். அதில் பள்ளிக் கல்வித்துறையில் அவரது அரசு செய்துவரும் அதிரடிகள் ஏராளம்.

கேரள அரசு பள்ளிகளில் படிக்கும் 35 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச காப்பீடு வழங்க முடிவெடுத்திருப்பதாக, கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தார். அடுத்த கட்டமாக அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்தை அரசு கையிலெடுத்துள்ளது.

கேரளம் முழுவதிலும் இருக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 45 லட்சம் வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக இருக்கின்றன. மடிக்கணினி, புரொஜக்டர், திரை உள்ளிட்ட கருவிகளுடன் இனி சாதாரண வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனமயமாக்கப்படும். இப்பள்ளிகளில் இலவச வைஃபை இணைய இணைப்பும் வழங்கப்பட உள்ளது. 8 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளும் டிஜிட்டல் வகுப்பறையாக மாற்றமடைய உள்ளன. இந்தியாவிலேயே மாநிலம் முழுவதிலும் பள்ளிகள் இப்படி தரம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us