உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 11, 2016

அ நிறம் | அளவு
பட்டம் வந்தது பாரு
படிக்கச் செய்தி நூறு
அட்டைப் படங்கள் ஜோரு
அக்கம் பக்கம் கூறு!
குட்டிச் செய்தி உண்டு
கதைகள் கூட உண்டு
வட்டம் போட்டுக் கொண்டு
வாசி! பலன்கள் உண்டு!
வெங்கி மாமா பதிலும்
விதவித மாய்ப் புதிரும்
பொங்கித் ததும்பும் பட்டம்
படித்தால் தொடலாம் உச்சம்!
அன்பைச் சொல்லும் பட்டம்
அறிவை வளர்க்கும் பட்டம்
இன்பம் கூட்டும் பட்டம்
என்றும் படிப்போம் பட்டம்!
- துஷ்யந்த் சரவணராஜ்,
அரசு மேல்நிலைப் பள்ளி, கிருங்காக்கோட்டை.
