PUBLISHED ON : ஏப் 11, 2016

சமண சமயத்தைப் பரப்பியவர் மகாவீரர். அஹிம்சை வழியை உணர்த்தியவர். பீகார் மாநிலம், வைசாலிக்கு அருகே உள்ள குண்டல என்ற கிராமத்தில் கி.மு.599ல் பிறந்தார். மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர்.
'சாலா' என்னும் மரத்தடியில் மகாவீரர் ஞானம் பெற்றார். இந்தியா முழுவதும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார்.
பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும் கொல்லாமையுமே அறநெறி என்று வலியுறுத்தியவர் மகாவீரர். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் 'நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்' என்ற தத்துவத்தைப் போதித்தவர்.
மகாவீரர் பிறந்தநாள் நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி, 'மகாவீர் ஜெயந்தி' கொண்டாடப்படுகிறது.
சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரராகப் போற்றப்பட்டார். சமண சமயத்தின் கடைசித் தீர்த்தங்கரர் இவர்.
மகாவீரர் கி. மு. 527ல் பீகாரிலுள்ள 'பாவா' என்னும் இடத்தில் தன் 72ஆவது வயதில் காலமானார்.
