PUBLISHED ON : ஜூலை 10, 2017
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லிபியாவில் பிறந்து, அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர் முகம்மது பஷிக். இறந்துவிடுவார்கள் என்று கைவிடப்பட்ட பல குழந்தைகளை, கடந்த 20 ஆண்டுகளாகத் தத்தெடுத்து, பராமரித்து வருகிறார். அமெரிக்கரான இவரது காதல் மனைவி டாவ்ன், ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திருமணத்துக்குப் பின்னர், முகம்மதுவும் அவரது சேவையில் இணைந்துகொண்டார். இவரது மனைவி டாவ்ன் முகம்மது, 2013ம் ஆண்டு இறந்தார். பின்னரும் அவர் தொடங்கிவைத்த சேவைகளை, முகம்மது தொடர்ந்து செய்துவருகிறார்.