sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

நீரில் ஒரு பிரமாண்டம்

/

நீரில் ஒரு பிரமாண்டம்

நீரில் ஒரு பிரமாண்டம்

நீரில் ஒரு பிரமாண்டம்


PUBLISHED ON : அக் 30, 2017

Google News

PUBLISHED ON : அக் 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர் யானை

ஆங்கிலப் பெயர்: 'ஹிப்போபோடமஸ்' (Hippopotamus)

அறிவியல் பெயர்: 'ஹிப்போபோடமஸ் அம்பிபியஸ்' (Hippopotamus Amphibius)

குடும்பம்: 'ஹிப்போபோட்டமிடே' (Hippopotamidae)

* ஆயுட்காலம்: 40 - 50 ஆண்டுகள்

* எடை: ஆண்: 1600 - 3200 கிலோ;

பெண்: 600 - 2500 கிலோ

* உயரம்: 6 அடி

* நீளம்: 15 அடி

* வாலின் நீளம்: 2 அடி

* வகைகள்: நீர் யானை (Common Hippopotamus),

பிக்மி நீர் யானை (Pygmy Hippopotamus)

* இனப்பெருக்க காலம்: 8 மாதங்கள்

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகளுக்கு அடுத்தபடியான பெரிய விலங்கு நீர் யானை. பாலூட்டி விலங்கான இது, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தது. ஆற்றுப் பகுதி, ஏரி போன்ற நீர்நிலைகளில் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர் யானைகள் வரை இருக்கும். பெண் நீர் யானைகளைவிட, ஆண் நீர் யானைகள் பெரியவை. 'ஹிப்போபோடமஸ்' என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'நீர்க் குதிரை' என்று பொருள்.

நீர் யானைகளுக்கு கண், நாசித் துவாரம், காது ஆகிய உறுப்புகள் தலையின் மேற் பகுதியில் இருக்கும். நீருக்குள்ளேயே இருந்தபடி தலையின் மேற்பகுதியை மட்டும் வெளியே நீட்டியபடி சுவாசிக்கும், பார்க்கும். தோல் பாகம் இளஞ்சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தில், எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். வழவழப்பான தோலில் முடிகள் இருக்காது. நீருக்கடியில் இவை வேகமாகச் செல்லும். பகல் பொழுதை நீரிலும், இரவுப் பொழுதை நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள நிலத்திலும் கழிக்கும்.

பற்கள் கூர்மையாக, தந்தம் போன்று வலிமையுடன் இருக்கும். நீண்ட உருளை வடிவில் பருத்த உடல் அமைப்பைக் கொண்டிருக்கும். தலைப் பகுதி பெரியதாகவும், வாய்ப்பகுதி அகன்று தட்டையாகவும், முன்புறம் நீண்டும் காணப்படும். புற்கள், பாசிகள் போன்றவையே இவற்றின் உணவு. மூன்று வாரங்களுக்குத் தேவையான உணவைக்கூட உண்டு, சேமித்து வைத்துக் கொள்ளும். தங்கள் குட்டிகளை இவை நீருக்கடியில் பிரசவிக்கின்றன. குட்டிகள் நீருக்கடியிலேயே பால் அருந்தும்.

- ப.கோபாலகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us