தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மலர்களே மலர்களே - 21: புற்களின் மலர்களில் மகரந்தச் சேர்க்கை

மலர்களே மலர்களே - 21: புற்களின் மலர்களில் மகரந்தச் சேர்க்கை

மலர்களே மலர்களே - 21: புற்களின் மலர்களில் மகரந்தச் சேர்க்கை


PUBLISHED ON : அக் 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூக்கும் மரத்தில் அடர்த்தியான இலைகள் நிரம்பி இருந்தால், காற்றில் மகரந்தம் பரவ முடியாமல் தடைபடும் அல்லவா? எனவே, காற்று வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மரங்களில் பூ பூத்து, மகரந்தம் வெளிப்படுவதற்கு முன்பு, இலையுதிர் மரங்கள் தமது இலைகளை உதிர்த்து மொட்டையாக இருக்கும். மரம் முழுவதும் பூக்கள் மட்டுமே இருக்கும். பூ பூத்து மகரந்தச் சேர்க்கை நடந்த பிறகுதான், மரத்தில் புதிய இலைகள் துளிர்விடும்.

மரங்களிலிருந்து பரவும் மகரந்தம் எப்படி அதைச் சுற்றிப் படர்கிறது? இது இயல்நிலைப் பரவல் (Normal Distribution) எனப்படும். காற்று வீசி மகரந்தத்தை அடித்துச் செல்லும். இயல்பான இந்தப் பரவல் நிலையைவிடச் சற்றே செறிவான பரவல் நிலையே, உகந்த பரவல் (Optimum) எனப்படும்.

இதன் மூலம், காற்று வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரங்கள் அடர்த்தியாக அருகருகே வளரும். அவற்றின் அடர்த்தியில் குந்தகம் ஏற்பட்டால், காற்று வழி மகரந்தச் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வளர்ச்சி பாதிக்கப்படும்.

புற்களின் பூங்கொத்து குறித்த கணினி சிமுலேஷன் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் வியப்பு அடைந்தனர். பொதுவாக புற்கள் போன்ற தாவரங்களில் கொண்டை போன்ற கதிர் அமைப்பில்தான் பூக்கள் மலரும். பொதுவே உச்சியில் தலைமுடியில் ஆண் பூக்கள் மலரும். கதிரின் இருபக்கமும் பெண் பூக்கள் மலரும்.

மெல்லிய காற்று வீசும்போது, புற்களின் பூங்கொத்து கொண்டை அதன் அருகில் காற்று வீசும் திசையில் நுண்ணிய சலசலப்பை ஏற்படுத்தும். வளையக்கூடிய காம்பில் மையத் தண்டின் எல்லா புறமும் பற்பல நுண்ணிய பூக்கள் அடர்ந்து அமைந்துள்ளன. அடர்த்தியாக அமைந்துள்ள இந்தப் பூங்கொத்து அமைப்பு, காற்றுவீசும் திசைக்கு எதிரே உள்ள காற்றுமறைவுப் பகுதியில் மகரந்தங்கள் கீழே விழும்படியான நுண் காற்றுப் பாதையை ஏற்படுத்தும். காற்றின் பூங்கொத்து கொண்ட கொண்டை ஆடி ஆடி தலைசைக்கும்போது, மகரந்தம் திரளும் பகுதியில் தலைநீட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கம்பு பயிர் குறித்த ஆய்வில், அதன் அருகே காற்றின் நுண்ணிய சலசலப்பு ஆங்கில எழுத்து Z போன்ற வடிவில் அமைகிறது என ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மகரந்தம் மறுபடி அதே பூங்கொத்தை நோக்கித் திரும்ப வரும்.

சில புல் வகைகளில் மையத்தண்டில் பூங்கொத்து அமையாமல், தீபக்கால் போன்ற அமைப்பு இருக்கும். மையத் தண்டில் பல கிளைத் தண்டுகள் இருக்கும். ஒவ்வொரு கிளைத் தண்டிலும் பூங்கொத்து இருக்கும். இத்தகைய அமைப்பு சிறிதளவுதான் காற்று சலசலப்பை ஏற்படுத்துகிறது என்றாலும், காற்று அடிக்கும்போது கதிர் கொண்டை அகன்ற பகுதியில் தலையாட்டுகிறது.

விரிந்த பகுதியில் உள்ள எல்லாம் மகரந்த மேகத்தில் மூழ்கி பெண் மலர்கள் சூல் கொள்கின்றன. காற்றின் ஊசல் உந்தினால், ஆடத் தொடங்கும் மையக்கதிர் பெண்டுலம் போல சீரிசை இயக்கத்தில் இயங்கும். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிளைக் கதிரும் ஊசலாடும்போது, மிகவும் சிக்கலான அசைவு ஏற்படும்.

இதன் தொடர்ச்சியாக அருகே உள்ள மகரந்தத்தை பெண் மலர்கள் பெற ஏதுவாகிறது. மேலும், புற்களில் சூல்முடி நீண்டு மயிர்தூவிகள் அடர்ந்து இருக்கும். காற்றில் ஆடும்போது மகரந்தம் இந்த மயிர்தூவிகளில் சிக்கும். ஆண் பூக்களில் மகரந்தக் கம்பி வெளியே தலைநீட்டி காற்றடிக்கும் திசையில் மகரந்தத்தை வெளிப்படுத்தும்.

த.வி.வெங்கடேஸ்வரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us