உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 25, 2016

அ நிறம் | அளவு
கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில், பலவகை விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன், இங்கு கொண்டுவரப்பட்ட மிகக் கொடிய விஷத் தன்மையுடைய கண்ணாடி விரியன் பாம்பு சில நாட்களுக்கு முன் 15 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த வகைப் பாம்புகள், முட்டையிடாமல் நேரடியாகக் குட்டியிடும். கிண்டி பூங்கா வரலாற்றில், பராமரிப்பில் இருக்கும் ஒரு பாம்பு குட்டியிடுவது இதுவே முதன்முறை.
