sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மகத்தான கலைஞன்!

/

மகத்தான கலைஞன்!

மகத்தான கலைஞன்!

மகத்தான கலைஞன்!


PUBLISHED ON : ஆக 28, 2017

Google News

PUBLISHED ON : ஆக 28, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைக்கேல் ஜாக்சன்

29.8.1958 - 25.6.2009

இண்டியானா, அமெரிக்கா.



“நண்பர்கள் மத்தியில் சாதாரணமாக ஆடினால்கூட, 'நீ என்ன மைக்கேல் ஜாக்சனா?' என்ற கிண்டல் கேள்வியைத் தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு பட்டிதொட்டி எல்லாம் புகழ்பெற்றவர் 'பாப் இசை மன்னன்' மைக்கேல் ஜாக்சன். பாடல் எழுதி, இசையமைத்து, நடனமாடி, இடையிடையே நடித்து, இசையின் மொத்தக் கலவையாகி ரசிகர்களின் உள்ளங்களில் கலந்தவர் எம்.ஜே!

3 சகோதரிகள், 5 சகோதரர்கள் என இவரது குடும்பம் பெரியது. சிறு வயதிலேயே பாப் இசை மீது ஆர்வம் இருந்ததால், பாடுவது, ஆடுவது என வீட்டிலேயே கச்சேரியைத் தொடங்கிவிட்டார். மைக்கின்

5 சகோதரர்களும் இவருடன் சேர்ந்து கும்மாளம் போட, 11 வயதிலேயே 'தி ஜாக்சன் 5' என்ற இசை நிகழ்ச்சியை சகோதரர்களுடன் சேர்ந்து நடத்தினார்.

1971 முதல் தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாக வெளியிட்டு, உலகம் முழுக்க ரசிகர்களைப் பெற்றார். 'காட் டு பி தேர்,' 'ஆஃப் தி வால்,' 'த்ரில்லர்,' 'பேட்,' 'டேஞ்சரஸ்,' 'ஹிஸ்டரி' போன்ற இசை ஆல்பங்கள் உலகளவில் ஹிட் அடித்தன.

'ரோபோ டான்ஸ்,' 'மூன் வாக்' என இவருடைய பிரபல நடன அசைவுகள் எல்லோரையும் சுண்டி இழுத்தன. புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக, கால்களை நகர்த்த உதவும் காலணியை உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். ராணுவச் சீருடைகளில் மாற்றம் செய்து அணிவது, உடைகளில் வைரம் பதிப்பது, ஷார்ட் பேன்ட் என இவர் அணிந்த உடைகள் அனைத்தும் ஃபேஷன் உலகின் அடையாளங்களாக மாறின.

நோயாலும், பிறராலும் ஏற்பட்ட காயங்களைக் கண்டுகொள்ளாமல் 'ஹீல் தி வேர்ல்ட்' (உலகின் காயங்கள் ஆற்றுவோம்) என்று பாடி எல்லோரையும் அன்பு செய்தார். முன்நெற்றியில் விழும் நூடுல்ஸ் முடியோடு மேடையில் தோன்றும் ஜாக்சனை இன்று பார்த்தாலும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்கும். அவர் இல்லையென்றாலும் அவரது புகழ் காலம் கடந்து நிலைத்திருக்கும்!

செல்லப் பெயர்கள்

கிங் ஆஃப் பாப்

வேக்கோ ஜாக்கோ

எம்.ஜே.

ஆப்பிள்ஹெட்

மைக்

ஸ்மெல்லி

விருதுகள்:

13: கிராமி விருதுகள் 'த்ரில்லர்' ஆல்பத்திற்காக மட்டும் 8 கிராமி விருதுகள்

39: கின்னஸ் உலக சாதனைகள்

16: உலக இசை விருதுகள்

26: அமெரிக்கன் இசை விருதுகள்






      Dinamalar
      Follow us