தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பள்ளியில் ஓர் அம்மா!

பள்ளியில் ஓர் அம்மா!

பள்ளியில் ஓர் அம்மா!


PUBLISHED ON : ஆக 26, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவப் பருவத்தில் தாய் தந்தைக்குப் பின் மனத்தில் பதியும் பெரிய ஆளுமை ஆசிரியர் தான். இன்னும் சில நாட்களில் ஆசிரியர் தினம் வரவிருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, இத்தனை ஆண்டுகளில் உங்களைக் கவர்ந்த ஆசிரியர் யார்? என கேட்டிருந்தோம். பதிலறிய, குமணஞ்சாவடி, நேஷனல் ஐ.டி. இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம்.

அலினா 12ஆம் வகுப்பு

ஆறாவதுல சயின்ஸ் கிளாஸ் எடுத்த கலைச்செல்வி மிஸ் தான், என்னுடைய ஃபேவரைட் மிஸ். இன்னிக்கு வரைக்கும் அவங்களை மாதிரி வேற யாரையுமே பார்க்கலை. பாசமாகவும் இருப்பாங்க; பாடத்தையும் எளிமையாக எடுப்பாங்க. எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் கோபப்படாம சொல்லிக் கொடுப்பாங்க.

பிரீத்தி 12ஆம் வகுப்பு

இங்கிலீஷ் கிளாஸ் எடுக்கும் உமா மிஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட ஆறாவதுல வந்தாங்க. எல்லா மாணவர்களையும் ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. ஸ்போர்ட்ஸ்ல எல்லாம் கலந்துக்கச் சொல்லுவாங்க. டாப் ரேங்க் எடுத்தா கிஃப்ட் கொடுப்பாங்க. ஹானர் சார்ட் எல்லாம் வச்சு பாராட்டுவாங்க. செம மிஸ் அவங்க!

திக் ஷிதா 12ஆம் வகுப்பு

நூர்ஜஹான் மிஸ் தான் என்னைக் கவர்ந்தவங்க. 3ஆவது படிக்கும் போது, தமிழ் அவ்வளவா தெரியாது. அவங்க தான் பொறுமையா சொல்லிக்கொடுத்தாங்க. ஸ்கூல்விட்ட பிறகும், தினமும் எனக்கு மட்டும் ஸ்பெஷலா தமிழ் வகுப்பு எடுத்தாங்க. அந்த வருஷமே தமிழ்ல 90 மார்க் எடுத்தேன். 10வதுல தமிழில் 95 மார்க் எடுக்க அவங்க தான் காரணம்.

வெங்கடாஜலம் 12ஆம் வகுப்பு

வளர்மதி மிஸ்தான் என்னோட ஃபேவரைட். வீட்டுல ஒரு அம்மான்னா... ஸ்கூல்ல இவங்கதான் அம்மா. கண்டிப்பானவங்க என்றாலும் அன்பானவங்க. முதலில் எனக்கு கணக்கு பிடிக்காமத்தான் இருந்துச்சு. அதைப் புரியும்படி சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப கணக்கை மெயின் சப்ஜெக்டாக படிக்கிறேன்னா, அவங்கதான் காரணம்.

செல்வக்குமார் 12ஆம் வகுப்பு

7வதுல தான் இந்த ஸ்கூலுக்கு வந்தேன். என்னோட கிளாஸ் டீச்சரா இருந்தவங்க சூர்யா மிஸ். ரொம்ப நல்ல மிஸ். கிளாஸுல கேம்ஸ் எல்லாம் வச்சு பாடம் நடத்துவாங்க. எல்லோர்கிட்டேயும் ஃபிரண்டா பழகுவாங்க. இன்னிக்குப் பார்த்தாலும் அட்வைஸ் பண்ணுவாங்க. அவங்ககிட்ட பேசினாலே, செம எனர்ஜியா இருக்கும்.

ஸ்ரீவரதன் 12ஆம் வகுப்பு

எப்போதும் நல்ல மார்க் எடுப்பேன். ஏதோவொரு மெத்தனதுல நான் ஒரு சமயம் ஃபெயில் ஆகிட்டேன். ரொம்பவும் மனசு உடைஞ்சு போனேன். அப்பத்தான் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கணும்னு அமுதா மிஸ், சொன்னாங்க. அந்த வார்த்தைகள் மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us