தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெயரில் என்ன?

பெயரில் என்ன?

பெயரில் என்ன?


PUBLISHED ON : ஆக 26, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலைபேசிகளில் ஆண்டுராய்டு இயங்குதளம் மிகவும் பிரபலம். அதன் அடுத்த பதிப்புக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பெயர் ஆண்டுராய்டு கியூ என்பதாகும். தற்போது அதற்கு ஆண்டுராய்டு 10 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆண்டுராய்டு இயங்குதளம். ஒவ்வொரு பதிப்பின்போதும், அதற்கு ஒரு சுவையான இனிப்புவகையின் பெயர் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், இதன் லோகோவும் மாறியுள்ளது. ஆண்டுராய்டு இலச்சினை என்பதே தனித்துத் தெரியும். தற்போது, ஆண்டுராய்டு பெயரின் தலைமேல் ரோபோ உட்கார்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுநாள் வரை பச்சை வண்ணத்தில் இருந்த ரோபோ தற்போது கறுப்பு வண்ணத்தில் மாற்றப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 2.5 பில்லியன் கருவிகளில் ஆண்டுராய்டு இயங்குதளம் பயன்படுகிறது. இந்நிலையில், பதிப்பின் எண் கொடுக்கப்படுவது ஒன்றே அதனை மேலும் மேம்படுத்திக்கொண்டே செல்வதற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்து கூகுள் பொறியியலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இனிமேல், ஆண்டுராய்டு 11, 12... என்று தொடர்வதற்கு வசதியாக இருக்கும்.

என்ன பெயர் கொடுத்தால் என்ன, இயங்குதிறன் மேம்பட்டால் போதாதா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us