முப்பரிணாம உருவங்களைக் காட்டும் புதிய ஸ்மார்ட் போன்
முப்பரிணாம உருவங்களைக் காட்டும் புதிய ஸ்மார்ட் போன்
PUBLISHED ON : ஜூன் 19, 2017

ஹோலோஃ ப்ளெக்ஸ் எனும் புதிய ஸ்மார்ட் போனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், கண் கண்ணாடி போன்ற எந்தவித கூடுதல் உபகரணங்களும் இல்லாமலே, பயனர்கள் முப்பரிமாண உருவங்களைப் பார்க்க முடியும். ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில், பயனர்கள் தொடு திரையின் மூலம், உருவங்களில் தேவையான மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.
இந்த வகை ஸ்மார்ட் போன்களில், வீடியோ மூலம் உரையாடும்போது, எதிராளியை மிகவும் தெளிவாக, நிஜ மனிதர் போன்றே பார்க்க முடியும். ஆங்க்ரி பேர்ட் போன்ற வீடியோ கேம்களையும் இந்த போனில் விளையாடும்போது, பறவைகள் திரையில் இருந்து எழுந்து நம் கண் முன் பறப்பது போன்ற அற்புத அனுபவத்தைப் பெற முடியும். ஒரே நேரத்தில், பல பயனர்களும் அந்த முப்பரிணாம உருவங்களைப் பார்க்க முடியும். எனவே இது, 3D மாடலிங் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.