தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மைனஸ் 20 டிகிரி குளிரை தாங்கும் பனை

மைனஸ் 20 டிகிரி குளிரை தாங்கும் பனை

மைனஸ் 20 டிகிரி குளிரை தாங்கும் பனை


PUBLISHED ON : டிச 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊசிப் பனை

ஆங்கிலப் பெயர்: 'நீடில் பாம்' (Needle Palm)

தாவரவியல் பெயர்: 'ராபிடோபைலம் ஹிஸ்ட்ரிக்ஸ்' (Rhapidophyllum Hystrix)

'அர்காசியே' (Arecaceae) குடும்பத்தைச் சேர்ந்த பனை வகைத் தாவரம். இது 'ராபிடோபைலம்' (Rhapidophyllum) பனை இனத்தில் உள்ள ஒரே வகை பனை. அதிக பனிப் பொழிவைத் தாங்கும் திறன் உடையது. ஏறக்குறைய மைனஸ் 20 டிகிரி வரை குளிரைத் தாங்கக்கூடியது. மூன்று மீட்டர் உயரம் வரை வளரும். சிறிய புதர் போன்று காணப்படும். தண்டுப் பகுதியில் முட்களை உடையது. இதன் இலைகள் விசிறி வடிவில் இருக்கும். விசிறிப் பனை என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது அடி மரப் பகுதியை தனியாக உருவாக்குவது இல்லை. தண்டுப் பகுதி பருமனாக விரிவடைந்து வளர்ந்து கொண்டே இருக்கும். நெருக்கமாக அமைந்த தண்டுகள் ஊடுருவ முடியாத புதர்க்காடு போல காட்சி தரும். சூரிய ஒளிக்காக, நிலத்தை நோக்கித் தாழ்ந்தபடி இதன் இலைகள் அமைந்திருக்கும். ஈரப்பதமுள்ள நிலத்திலேயே நன்கு வளரும். உலகம் முழுவதும், முக்கியமாக ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படும் தாவரம். அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

- கிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us