தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அரிதான வாயு... உயிர் காக்கும் வாயு!

அரிதான வாயு... உயிர் காக்கும் வாயு!

அரிதான வாயு... உயிர் காக்கும் வாயு!


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக ஓசோன் பாதுகாப்பு தினம் செப்டம்பர் 16

'ஓசோன்' என்பது, மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்ட, ஒரு வகை ஆக்சிஜன் வாயு. 'O3' என்ற வேதியியல் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. ஒரு கோடி காற்று மூலக்கூறுகளில், மூன்றே ஓசோன் மூலக்கூறுகள்தான் இருக்குமாம். இவ்வளவு அரிதாகக் காணப்பட்டாலும், இந்த வாயு, பூமியில் இருந்து 15 கி.மீ., முதல் 60 கி.மீ., உயரம்வரை இருக்கும் 'ஸ்டிராட்டோஸ்பியர்' (Stratosphere)எனும் காற்று அடுக்கில், ஒரு படலமாகக் காணப்படுகிறது. சூரியனில் இருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களில், 98 சதவீதத்தை உறிஞ்சி, நம்மையும் இதர உயிர்களையும் பாதுகாக்கிறது.

1985ஆம் ஆண்டில், அண்டார்டிகா பகுதியில் இருக்கும் ஓசோன் அடுக்கின் அடர்த்தி குறைந்து வருவது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம், குளோரோ புளூரோ கார்பன், மிதைல் குளோரோஃபார்ம், மெத்தில் புரோமைடு, நைட்ரிக் ஆக்ஸைடு போன்ற வேதிப்பொருட்கள், ஓசோன் வாயுவுடன் வினைபுரிந்து, அதை வேறு வேதிப்பொருட்களாக மாற்றியதுதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேதிப்பொருட்கள் அனைத்தும், தொழில் வளர்ச்சியின் காரணமாக இயந்திரங்கள் வெளிப்படுத்திய நச்சு வாயுக்கள்.

ஐ.நா. அமைப்பு, ஓசோன் படலத்தை அழிக்கும் வேதிப்பொருட்களைத் தடை செய்வதற்கான மாண்ட்ரீல் உடன்படிக்கையை, கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி அன்று பிரகடனப்படுத்தியது. மேலும், ஓசோன் படலத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 1995ஆம் ஆண்டில், செப்டம்பர் 16 ஐ, 'உலக ஓசோன் பாதுகாப்பு' தினமாக அறிவித்தது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பால், ஓசோன் படலம் மெலிந்து வருவது தடுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், 80களில் ஓசோன் இருந்த நிலையை எட்டுவதற்கு, செப்டம்பர் ௧௬ இன்னும் 30, 40 வருடங்கள் ஆகுமாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us