PUBLISHED ON : அக் 19, 2016

தாவரங்களின் வழக்கமான உணவு 'ஸ்டார்ச்' (Starch). சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் இவைகளைக் கொண்டு தாவரங்கள் ஸ்டார்ச்சைத் தயாரித்துக் கொள்கின்றன. ஆனால், தாவரங்களில் அசைவ உணவு உண்ணும் ஒரு விசித்திரமான செடிதான் 'நெபந்தஸ்' (Nepenthes). இதன் இலைகளின் ஒரு பகுதி குவளை போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும். அதற்கு ஒரு மூடியும் இருக்கும். இந்தக் குவளை வடிவம் பல வண்ணங்களில், பல வடிவங்களில், பலவித வாசனைகளோடு பூச்சிகளை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த வாசனையில் மயங்கி பூச்சிகள் நெபந்தஸ் செடியின் குவளை போன்ற பகுதியில் உள்ளே நுழைந்ததும் குவளை மூடிக்கொள்ளும். பிறகு பூச்சிகளின் கதை அவ்வளவுதான்… நெபந்தஸ் செடியின் குவளைகள் நம்முடைய வயிறு போலச் செயல்பட்டு பூச்சிகளைச் செரிமானம் செய்துவிடும். நைட்ரஜன் சத்து இல்லாத இடங்களில் வளர்வதால் இந்தத் தாவரம் நைட்ரஜன் சத்து நிறைந்திருக்கும் பூச்சிகளை உட்கொள்கிறது. இந்தத் தாவரம் போர்னியா, சுமத்ரா மலேசியா, பிலிபைன்ஸ், வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளது. இந்தியாவில் மேகாலயா மாநிலத்தின் காசி மலைப்பகுதியில் காணப்படுகிறது.
- பழ. கோபி
